ஆரணியில் ரூ.1 கோடியே 40 லட்சத்தில் சாலை அபிவிருத்தி திட்டப்பணிகள்: அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் அடிக்கல் நாட்டினார்
ஆரணியில் ரூ.1 கோடியே 40 லட்சத்தில் சாலை அபிவிருத்தி திட்டப்பணிகளுக்கு அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் அடிக்கல் நாட்டினார்.
ஆரணி,
ஆரணி- வேலூர் ரோடு சந்திப்பான மாங்காமரம் அருகில் இருந்து நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம், பராமரிப்பு, சாலைப் பாதுகாப்பு 2018-19-ம் திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சம் மதிப்பில் சாலையின் இருபுறமும் 5 அடி வரை சாலைகளை அகலப்படுத்தி நடு மையத்தில் சென்டர்மீடியன் அமைத்திடவும், சேவூர் பைபாஸ் சாலையில் இருந்து சேவூர் வரையிலும் சாலை சந்திப்பு அபிவிருத்தி பணிகள் ரூ.50 லட்சம் மதிப்பிலும், அதேபோல் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.40 லட்சம் மதிப்பில் சேவூர் பஸ்நிறுத்தம் அருகில் சாலை சந்திப்பு அபிவிருத்தி செய்தல் பணிகளுக்காக அடிக்கல் நாட்டு விழா நேற்று மாங்காமரம் பஸ்நிறுத்தம் அருகே நடந்தது. மணிகண்டன் சிவாச்சாரியார் தலைமையில் வேதமந்திரங்கள் முழங்க பூஜைகள் நடந்தது.
தூசி கே.மோகன் எம்.எல்.ஏ., நெடுஞ்சாலைத் துறை கோட்ட பொறியாளர் வி.முரளி, உதவி கோட்ட பொறியாளர் என்.செந்தில்குமார், உதவி பொறியாளர் எ.கருணாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒப்பந்ததாரர்கள் அ.கோவிந்தராசன், கே.லட்சுமணன், ஏ.ஜி.ஆர்.மோகன் ஆகியோர் வரவேற்றனர்.
சிறப்பு அழைப்பாளராக இந்து சமயஅறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தலைமை தாங்கி அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
நிகழ்ச்சியில் வேலூர் ஆவின் துணைத்தலைவர் பாரி பி.பாபு, மத்திய கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் வக்கீல் கே.சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கண்ணமங்கலம் அருகே உள்ள கொளத்தூர் ஏரிக்கு நீர்வரத்துக் கால்வாய் அணைக்கட்டு சிங்கிரிகோவில் நாகநதியில் 1938-ம் ஆண்டு கட்டப்பட்டது. தற்போது இந்த அணைக்கட்டு மற்றும் கால்வாய் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.86 லட்சம் மதிப்பில் சீரமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்பணிகளை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் அறிவழகனிடம் தற்போதைய நிலவரம் குறித்து கேட்டறிந்து பணிகளை மழைக்காலம் தொடங்குவதற்குள் விரைந்து முடிக்க ஆலோசனை வழங்கினார்.
ஆரணியை அடுத்த காமக்கூர் ஏரிக்கு கமண்டல ஆற்றின் குறுக்கே வெள்ளுர் கிராமத்தின் அருகே காமக்கூர் அணைக்கட்டில் இருந்து ஆற்று தண்ணீர் செல்லும். இந்த ஆற்று அணைக்கட்டில் குடிமராமத்து திட்டத்தில் ரூ.90 லட்சம் செலவில் புனரமைத்து மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியினை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆரணி எம்.எல்.ஏ. அலுவலகத்தில் இந்து சமயஅறநிலையத் துறை இணைஆணையர் விழுப்புரம் செந்தில்வேலன், உதவிஆணையர் (திருவண்ணாமலை) ஜான்சிராணி, பொறியாளர் ராகவன், வருவாய் ஆய்வாளர் நடராஜன், கோவில் நிர்வாக அலுவலர் ம.சிவாஜி ஆகிய அதிகாரிகளுடன் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் ஆலோசனைகூட்டம் நடத்தினார். பின்னர் கோட்டை கைலாசநாதர் கோவிலில் தேர் அமைக்கும் பணியை அமைச்சர் பார்வையிட்டார்.
பின்னர் அமைச்சர் கூறுகையில், எஸ்.வி.நகரம் முத்து மாரியம்மன் கோவிலுக்கு புதிதாக தேர் அமைக்கும் பணி முடிந்துவிட்டது. அதற்காக வெள்ளோட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. அதேபோல் ஆரணி கைலாசநாதர் கோவில் தேரும், காமக்கூர் சந்திரசேகரசாமி கோவில் தேரும், பூதமங்கலம் ஆதிகேசவபெருமாள் கோவிலுக்கு புதிய தேரும், தேசூர் காசிவிஸ்வநாதர் சிவன் கோவிலுக்கு புதிய தேரும் செய்யும் பணிகள் முடிந்தது. இந்த தேர்கள் விரைவில் வெள்ளோட்டம் விடப்படும் என்றார்.
Related Tags :
Next Story