சென்னை விமான நிலையத்தில் ரூ. 36½ லட்சம் தங்கம் பறிமுதல் ரூ.11½ லட்சம் ஈரான் நாட்டு குங்குமப்பூவும் சிக்கியது
சென்னை விமான நிலையத்தில் சிங்கப்பூர், துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.36½ லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் ரூ.11½ லட்சம் மதிப்புள்ள ஈரான் நாட்டு குங்குமப்பூவும் சிக்கியது.
ஆலந்தூர்,
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்துவரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து விமான நிலையத்தில் அவர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சிங்கப்பூர் மற்றும் துபாயில் இருந்து சென்னைக்கு விமானங்கள் வந்தன. சிங்கப்பூரில் இருந்து வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த ராவுத்தர் நைனா (வயது 25), பக்கீர் முகமது (24) மற்றும் துபாயில் இருந்து சென்னை வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த முகமது அப்துல் (25) ஆகியோரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர்.
அதிகாரிகளிடம் 3 பேரும் முன்னுக்குப்பின் முரணாக பேசினர். அவர்களது உடைமைகளை சோதனை செய்தபோது, அதில் எதுவும் இல்லை. 3 பேரையும் தனியறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர்.
அதில் அவர்கள், உள்ளாடைகளுக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். 3 பேரிடம் இருந்தும் ரூ.36 லட்சத்து 51 ஆயிரம் மதிப்புள்ள 937 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதேபோல் துபாயில் இருந்து கொழும்பு வழியாக சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த சிவகங்கையை சேர்ந்த ஜாகீர்உசேன் (25) என்பவரது உடைமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அதில் அவர் துபாயில் இருந்து கடத்தி வந்த ரூ.4 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள விலை உயர்ந்த செல்போன்கள், ‘ஸ்மார்ட்’ கைக்கெடிகாரங்கள், ரூ.29 ஆயிரம் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் ரூ.11 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 4 கிலோ 750 கிராம் எடைகொண்ட ஈரான் நாட்டு குங்குமப்பூ ஆகியவற்றை கைப்பற்றினர்.
சென்னை விமான நிலையத்தில் 4 பேரிடம் இருந்து ரூ.36 லட்சத்து 51 ஆயிரம் மதிப்புள்ள தங்கம், ரூ.15 லட்சத்து 99 ஆயிரம் மதிப்புள்ள ஈரான் நாட்டு குங்குமப்பூ, செல்போன்கள், கைக்கெடிகாரங்கள், சிகரெட்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள் இது தொடர்பாக பிடிபட்ட 4 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story