மாவட்ட செய்திகள்

திருவையாறு அருகே குளத்தில் கற்சிலை கண்டெடுப்பு + "||" + Detection of granite in a pond near Thiruvaiyaru

திருவையாறு அருகே குளத்தில் கற்சிலை கண்டெடுப்பு

திருவையாறு அருகே குளத்தில் கற்சிலை கண்டெடுப்பு
திருவையாறு அருகே குளத்தில் கற்சிலை கண்டெடுக்கப்பட்டது.
திருவையாறு,

தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே பெரும்புலியூர் கிராமத்தில் உள்ள மடாவா குளத்தில் குடிமராமத்து திட்டத்தின்கீழ் ரூ.1 லட்சம் மதிப்பில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த குளத்தில் கடந்த 21-ந் தேதி நடந்த பணியின்போது முருகன், கால பைரவர் மற்றும் சித்தர் ஒருவரின் சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. இந்த 3 சிலைகளும் கற்சிலைகளாகும்.


இந்த நிலையில் குளத்தை தூர்வாரும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. நேற்று குளத்தை தூர்வாரியபோது 3 அடி உயரம் கொண்ட ஒரு கற்சிலை கண்டெடுக்கப்பட்டது. இந்த சிலை ஆழ்வார் ஒருவருடைய சிலை என கூறப்படுகிறது. ஆனால் ஆழ்வாரின் பெயர் தெரியவில்லை.

விசாரணை

இதுபற்றி தகவல் அறிந்த வருவாய் ஆய்வாளர் விஜயராமன், கிராம நிர்வாக அதிகாரி மகேஸ்வரி, கிராம உதவியாளர் சசிகலா உள்ளிட்டோர் அங்கு சென்று சிலையை கைப்பற்றினர்.

பின்னர் அந்த சிலை திருவையாறு தாசில்தார் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. முன்னதாக சிலையை தாசில்தார் இளமாருதி பார்வையிட்டார். இந்த சிலை எந்த காலத்தை சேர்ந்தது? எந்த கோவிலுக்குரிய சிலை? என்பது பற்றி அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. வேதாரண்யம் அருகே 2,500 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழி கண்டெடுப்பு
வேதாரண்யம் அருகே 2,500 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டது.
2. திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்-அகிலாண்டேஸ்வரி கோவிலில் தங்கப்புதையல் கண்டெடுப்பு
திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்-அகிலாண்டேசுவரி கோவிலில் தங்கப்புதையல் கண்டெடுக்கப்பட்டது.
3. பென்னாகரம் அருகே அரசு பள்ளி வளாகத்தில் பழங்கால நாணயங்கள் கண்டெடுப்பு
பென்னாகரம் அருகே அரசு பள்ளி வளாகத்தில் பழங்கால நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டன.
4. கொள்ளிடம் ஆற்றில் நவக்கிரக சாமி சிலைகள் கண்டெடுப்பு
திருமானூர் அருகே கொள்ளிடம் ஆற்றில் நவக்கிரக சாமி சிலைகள் கண்டெடுப்பு.