முதல்-மந்திரியின் பொய் பிரசாரத்தை அம்பலப்படுத்த பொதுக்கூட்டங்கள் மராட்டிய காங்கிரஸ் அறிவிப்பு
முதல்-மந்திரியின் பொய் பிரசாரத்தை அம்பலப்படுத்த பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் என்று காங்கிரஸ் அறிவித்து உள்ளது.
மும்பை,
முதல்-மந்திரியின் பொய் பிரசாரத்தை அம்பலப்படுத்த பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் என்று காங்கிரஸ் அறிவித்து உள்ளது.
யாத்திரை
முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் சட்டசபை தேர்தலையொட்டி மகாஜனாதேஷ் என்ற ரத யாத்திரை மூலம் மக்களை சந்தித்து வருகிறார்.
இந்த நிலையில் மராட்டிய மாநில காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
மாநிலம் வறட்சியையும், வெள்ளத்தையும் எதிர்கொண்ட நேரத்திலும் பாதிக் கப்பட்ட மக்களைப் புறக்கணித்து, தேர்தலில் வெற்றிபெற முதல்-மந்திரி பட்னாவிஸ் ‘மகாஜனாதேஷ் யாத்திரை’ மேற்கொண்டு வருகிறார். அதுமட்டும் இன்றி யாத்திரையின்போது பல்வேறு செய்யாத பணிகளையும் கூறி மக்களிடம் நன்மதிப்பை பெற முயற்சி செய்கிறார். அவரது பொய் பிரசாரத்தை அம்பலப்படுத்த காங்கிரஸ் சார்பில் ‘மஹாபர்தாபஷ்’ என்ற பெயரில் பொதுக்கூட்டங்கள் நடத்த உள்ளோம். முதல்கட்டமாக வார்தா, சந்திராப்பூர், கட்சிரோலி, பண்டாரா, கோண்டியா, யவத்மால், வாசிம், அகோலா மற்றும் புல்தானா மாவட்டங்களில் இந்த பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும்.
தேசிய தலைவர்கள்
இந்த பொதுக்கூட்டங்களில் கட்சியின் தேசிய தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, குலாம்நபி ஆசாத் மற்றும் சுசில் குமார் ஷிண்டே, முன்னாள் முதல்-மந்திரிகள் அசோக் சவான், பிரிதிவிராஜ் சவான் ஆகியோர் கலந்து கொள்வார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story