ஸ்மார்ட் சிட்டிக்கான திட்டமிட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்; அதிகாரிகளுக்கு அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தல்
ஸ்மார்ட் சிட்டிக்கான திட்டமிட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.
திருப்பூர்,
திருப்பூர் மாநகராட்சியை ஸ்மார்ட் சிட்டியாக மாற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கான திட்ட அறிக்கை தயார் செய்து அளவிடும் பணிகள், அடிக்கல் நாட்டும் பணிகள், ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் இந்த பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று நடந்தது.
கூட்டத்திற்கு கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி முன்னிலை வகித்தார். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியின் வளர்ச்சிக்காக விரிவடைந்த பகுதிகளில் குடிநீர் அபிவிருத்தி திட்டம், திறந்தவெளி காலியிடங்களை மேம்படுத்துதல், ஒருங்கிணைந்த மேலாண்மை மற்றும் கட்டுப்பாட்டு மையம், புதிய குடிநீர் திட்டப்பணிகள், பாதாள சாக்கடைப்பணிகள், மாநாட்டு அரங்கம் கட்டுதல், நவீன பஸ்நிலையம், பல அடுக்கு வாகனம் நிறுத்துமிடம், எல்.இ.டி. தெருவிளக்குகள், சூரியஒளி மூலம் மின்சாரம் தயாரிக்க பேனல்கள் அமைத்தல், தினசரி மற்றும் வாரச்சந்தை மேம்படுத்துதல், பூ மற்றும் மீன் மார்க்கெட் மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற உள்ளது.
இதுமட்டுமின்றி ஓடைகள் மேம்பாடு செய்தல், சாலை மேம்படுத்துதல், சங்கிலிப்பள்ளம் ஓடை ஓரத்திலும், தாராபுரம் ரோடு முதல் நொய்யல் ஆற்றின் தெற்கு கரையோரம் வரை மேம்பாலம் கட்டுதல் உள்ளிட்ட பணிகளும் நடைபெற உள்ளது. இந்த பணிகளுக்காக மத்திய அரசு ரூ.1,000 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் 28–ந்தேதி இதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த நிலையில் திருப்பூர் மாநகராட்சி பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஸ்மார்ட் சிட்டி வளர்ச்சித் திட்டப்பணிகள் மற்றும் திட்ட விவரங்கள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் விரிவான ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், தற்காலிகமாக பஸ்நிலையம், தினசரி மார்க்கெட் மற்றும் பூ மார்க்கெட் அமைப்பது குறித்தும் ஆலோசனை நடத்தினார். அப்போது பணியில் உள்ள சிக்கல்கள், பணியின் போது ஏற்படும் போக்குவரத்து நெரிசலை எவ்வாறு சமாளிப்பது, மாற்று இடங்களுக்காக என்னென்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அத்துடன், இந்த ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கான வளர்ச்சி பணிகளை விரைவில் முடித்திட வேண்டும் என்று துறை சார்ந்த அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.
இந்த கூட்டத்தில், எம்.எல்.ஏ.க்கள் சு.குணசேகரன் (திருப்பூர் தெற்கு), கரைப்புதூர் ஏ.நடராஜன் (பல்லடம்), கே.என்.விஜயகுமார் (திருப்பூர் வடக்கு), மாவட்ட வருவாய் அதிகாரி ஆர்.சுகுமார், மாநகராட்சி கமிஷனர் சிவகுமார், மாநகர பொறியாளர் ரவி, மாநகராட்சி செயற்பொறியாளர் திருமுருகன், உதவி ஆணையர்கள், அரசு அதிகாரிகள், மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story