வங்கியில் கடன் வாங்காதவருக்கு ரூ.3.90 லட்சம் கடன் வாங்கியதாக நோட்டீஸ் விவசாயி அதிர்ச்சி


வங்கியில் கடன் வாங்காதவருக்கு ரூ.3.90 லட்சம் கடன் வாங்கியதாக நோட்டீஸ் விவசாயி அதிர்ச்சி
x
தினத்தந்தி 25 Aug 2019 11:00 PM GMT (Updated: 25 Aug 2019 6:45 PM GMT)

வங்கியில் கடன் வாங்காத விவசாயிக்கு ரூ.3 லட்சத்து 90 ஆயிரம் கடன் வாங்கியதாக வங்கி நிர்வாகம் அனுப்பிய நோட்டீசால் விவசாயி அதிர்ச்சி அடைந்தார்.

திருவாரூர்,

திருவாரூர்-நாகை பைபாஸ் சாலை மதுரா நகரை சேர்ந்தவர் பாண்டியன். விவசாயி. இவருக்கு திருவாரூர் விளமலில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் இருந்து கடன் திருப்பி செலுத்தவில்லை என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதனை கண்ட விவசாயி பாண்டியன் அதிர்ச்சியடைந்தார். இதில் ரூ.3 லட்சத்து 90 ஆயிரம் கடன் வாங்கி இருப்பதாகவும் கடனை கட்டவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து பாண்டியன் விளமல் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளைக்கு சென்று தனக்கு வங்கியில் கணக்கே இல்லை எனவும், கடன் எதுவும் வாங்காத நிலையில் கடன் வாங்கியதாக நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக வங்கி நிர்்வாகம் மீது புகார் தெரிவித்தார்.

மேலும் பாண்டியன் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் வங்கி மேலாளருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக தெரிகிறது. கடனை வாங்காதவருக்கு வங்கி நோட்டீஸ் அனுப்பப்பட்ட சம்பவம் விவசாயிகள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story