நாமக்கல் உழவர்சந்தையில் ரூ.6½ லட்சத்துக்கு காய்கறிகள் விற்பனை
நாமக்கல் உழவர்சந்தையில் நேற்று ரூ.6½ லட்சத்துக்கு காய்கறிகள் விற்பனையானது.
நாமக்கல்,
நாமக்கல் - கோட்டை சாலையில் உழவர்சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு நாமக்கல், எருமப்பட்டி, மோகனூர், புதுச்சத்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் விளையும் காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.
இந்த சந்தைக்கு விடுமுறை நாளான நேற்று 21½ டன் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இந்த காய்கறிகள் ரூ.6 லட்சத்து 49 ஆயிரத்து 840-க்கு விற்பனை செய்யப்பட்டன. இவற்றை 5 ஆயிரத்து 380 பேர் வாங்கி சென்றனர்.
நாமக்கல் உழவர்சந்தையில் நேற்று தக்காளி கிலோ ரூ.18-க்கும், கத்தரி கிலோ ரூ.32-க்கும், வெண்டை கிலோ ரூ.14-க்கும், புடலைக்காய் கிலோ ரூ.20-க்கும், பீர்க்கன் கிலோ ரூ.24-க்கும், கேரட் கிலோ ரூ.52-க்கும், பீட்ரூட் கிலோ ரூ.40-க்கும், பீன்ஸ் கிலோ ரூ.52-க்கும், இஞ்சி கிலோ ரூ.90-க்கும் விற்பனை செய்யப்பட்டன. இதேபோல் சின்ன வெங்காயம் கிலோ ரூ.27-க்கும், பெரிய வெங்காயம் கிலோ ரூ.28-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
காளான் கிலோ ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட்டது. காளான் வரத்து குறைந்து விட்டதால், அதன் விலை அதிகரித்து இருப்பதாக உழவர்சந்தை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story