படவேட்டில், ரூ.30 லட்சத்தில் அம்மா பூங்கா, உடற்பயிற்சி கூடம் - அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார்
படவேட்டில் ரூ.30 லட்சம் மதிப்பில் அம்மா பூங்கா, உடற்பயிற்சி கூடத்தை அமைச்சர் சேவூர் எஸ். ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.
கண்ணமங்கலம்,
கண்ணமங்கலம் அருகே படவேடு பீமலிங்கேஸ்வரர் மலை அடிவாரத்தில் தாய் திட்டத்தின் கீழ் ரூ.30 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள அம்மா பூங்கா மற்றும் இளைஞர்கள் உடற்பயிற்சி கூடம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
ஆரணி உதவி கலெக்டர் மைதிலி தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் பன்னீர்செல்வம், தூசி கே.மோகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயசுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். போளூர் வட்டார வளர்ச்சி அலுவலர் கே.ஆனந்தன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கலந்து கொண்டு அம்மா பூங்கா மற்றும் இளைஞர்கள் உடற்பயிற்சி கூடத்தை குத்து விளக்கேற்றி கல்வெட்டை திறந்து வைத்து பார்வையிட்டார்.
விழாவில் செயற்பொறியாளர் சுந்தரபாண்டியன், உதவி செயற்பொறியாளர் ஜெகன் ஆரா, வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணியன், உதவி பொறியாளர் தெய்வராணி, பணி மேற்பார்வையாளர் உதயகுமார், அரசு வக்கீல் சங்கர், வேலூர் ஆவின் துணைத்தலைவர் பாரிபாபு, பொதுக்குழு உறுப்பினர் பொய்யாமொழி, முன்னாள் கவுன்சிலர்கள் திருமால், துரை, ராஜாபாபு, ரகு, ஊராட்சி செயலாளர்கள் அன்பழகன், மனோகரன், கணேசன், சின்னப்பையன், சேகர், ராமலிங்கம், தனசேகரன், படவேடு ஊராட்சி செயலர் அண்ணாச்சி, படவேடு முன்னாள் துணை தலைவர் மணி, லோகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரனுக்கு பொதுமக்கள் சார்பில் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
Related Tags :
Next Story