விநாயகர் சதுர்த்தியை சுற்றுச்சூழல் பாதிக்காதவாறு கொண்டாட வேண்டும்-கலெக்டர் பிரபாகர் வேண்டுகோள்
விநாயகர் சதுர்த்தி விழாவினை சுற்றுச்சூழல் பாதிக்காதவாறு கொண்டாட வேண்டும் என கிருஷ்ணகிரி கலெக்டர் பிரபாகர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கிருஷ்ணகிரி,
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வருகிற 2-ந் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு விநாயகர் சிலை தயாரிப்பது, வழிபாடு செய்வது மற்றும் சிலை கரைப்பதை பின்வரும் வழிமுறைகளை பின்பற்றி, சுற்றுச்சூழல் பாதிக்காதவாறு கொண்டாடுமாறு கேட்டுக்கொள்கிறேன். அதன்படி, விநாயகர் சிலை அமைப்பதற்கு படிவம் 1-ல் உதவி கலெக்டரிடம் தடையில்லா சான்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். தடையில்லா சான்று பெற்றவுடன், வருவாய் கோட்ட அலுவலர் படிவம் 2-ல் அனுமதி வழங்குவார்.
களி மண், இயற்கை சாயம் ஆகிய இயற்கையில் அழியக்கூடிய பொருட்களை கொண்டு செய்யப்படும் சிலைகளை மட்டுமே நிறுவ வேண்டும். எந்த அரசியல், சமுதாய தலைவருக்கு ஆதரவாகவும் பிளக்ஸ் போர்டுகள் வைக்கக்கூடாது. காவல்துறை அனுமதித்த பாதை மற்றும் நேரத்தில் மட்டுமே சிலை கரைப்பு ஊர்வலம் நடைபெற வேண்டும். சிலை அடிபாகம் மற்றும் மேடை ஆகியவற்றை சேர்த்து 10 அடிக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். வழிபாட்டு தளங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு அருகில் சிலை வைப்பதை தவிர்க்க வேண்டும்.
மேலும், பூஜை நேரங்களில் காலை 2 மணி நேரம் மற்றும் மாலை 2 மணி நேரம் மட்டுமே ஒலிப்பெருக்கி பயன்படுத்த அனுமதிக்கப்படும். கூம்பு வடிவம் கொண்ட ஒலிப்பெருக்கி தடை செய்யப்படுகிறது. பெட்டி வடிவிலான ஒலிப்பெருக்கியை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அனுதிக்கப்பட்ட ஒலி டெசிபலுக்கு அதிகமாக ஒலிப்பெருக்கி பயன்படுத்தி பேசுவது, இசைப்பது ஆகியவை தடை செய்யப்படுகிறது. சமூக வெறுப்பை தூண்டுகின்ற வகையிலோ, பிற மதத்தினரின் உணர்வுகளை பாதிக்கின்ற வகையிலோ எந்த வகையிலும் கோஷங்களை எழுப்பக்கூடாது. பொது அமைதி, பாதுகாப்பு மற்றும் சமூக நல்லிணக்கம் ஆகியவற்றை பாதுகாக்கும் வகையில் வருவாய், காவல், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் வழங்கும் எந்த ஒரு நிபந்தனையையும் அமைப்பாளர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளை, அவை வைத்த நாளிலிருந்து 5-வது நாட்களுக்குள் சிலைகளை கரைப்பதற்கு எடுத்துச் செல்ல வேண்டும். மேலும், நான்கு சக்கர வாகனத்தை பயன்படுத்தி மட்டுமே சிலைகள் எடுத்துச்செல்ல வேண்டும். சிலை கரைக்க எடுத்து செல்லும் வாகனத்தில் மோட்டார் வாகனச் சட்டம் 1988-ல் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளின்படி சிலை அமைப்பாளர்கள் வாகனத்தில் செல்ல வேண்டும். சிலை வைக்க அனுமதி வழங்கும் அலுவலர், அனுமதி வழங்க மறுக்கும் பட்சத்தில் உத்தரவிற்கு எதிராக மாவட்ட கலெக்டரிடம் மேல்முறையீடு செய்ய வேண்டும். எனவே, மேற்கண்ட வழிமுறைகளை பின்பற்றும்படி பொதுமக்களை கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story