ஓசூர் அருகே அட்டகாசம் செய்த காட்டு யானை மயக்க ஊசி போட்டு பிடிக்கப்பட்டது
ஓசூர் அருகே அட்டகாசம் செய்த காட்டு யானையை கும்கிகளின் உதவியுடன் வனத்துறையினர் மயக்க ஊசி போட்டு பிடித்தனர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சானமாவு காட்டில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக 4 யானைகள் முகாமிட்டிருந்தன. அவற்றில் 2 யானைகள் தேன்கனிக்கோட்டை வழியாக அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்டப்பட்டன. மீதம் இருந்த 2 யானைகள் தனியாக பிரிந்து கெலவரப்பள்ளி அணை பகுதிக்கு சென்றன. இதில் ஒரு யானை ஆண் யானை ஆகும். இந்த யானை கடந்த ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே அடுத்தடுத்த நாட்களில் 3 பேரை தூக்கி வீசி கொன்று மயக்க ஊசி போட்டு பிடிக்கப்பட்டது ஆகும்.
ஒகேனக்கல் அருகே வனப்பகுதியில் விடப்பட்ட அந்த யானையின் இடது புற தந்தம் நீளமாகவும், வலது புற தந்தம் உடைந்தும் காணப்படும். அந்த யானை மீண்டும் வேறு ஒரு யானையுடன் சேர்ந்து கொண்டு கெலவரப்பள்ளி அணை பகுதியில் அட்டகாசம் செய்வதை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் சூளகிரி அருகே முனியம்மா என்ற பெண்ணையும் இந்த யானை தாக்கி கொன்றது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கர்நாடக வனப்பகுதிக்கு சென்ற இந்த யானை அங்கு விவசாயி அன்னையப்பா என்பவரையும் கொன்றது. இதனால் கர்நாடக வனத்துறையினர் அங்கிருந்து ஓசூர் வனப்பகுதிக்கு மீண்டும் விரட்டி விட்டனர்.
இதன் காரணமாக இந்த யானை மீண்டும் அட்டகாசம் செய்ய தொடங்கியது. இது குறித்த தகவலின் பேரில் கிருஷ்ணகிரி மாவட்ட வன அலுவலர் தீபக் பில்கி தலைமையில் வனத்துறையினர் காட்டு யானையை கும்கி யானைகள் உதவியுடன் மயக்க ஊசி போட்டு பிடிக்க முடிவு செய்தனர். இதற்காக கோவை மாவட்டம் டாப்சிலிப் பகுதியில் இருந்து மாரியப்பன், பரணி ஆகிய 2 கும்கி யானைகள் ஓசூருக்கு வரவழைக்கப்பட்டன. தொடர் மழை காரணமாக அட்டகாசம் செய்யும் காட்டு யானையை பிடிக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது.
கடந்த 23 மற்றும் 24-ந் தேதிகளில் கும்கி யானைகள் உதவியுடன் காட்டு யானைக்கு மயக்க ஊசி போடும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அது தோல்வியில் முடிவடைந்தது. இந்த நிலையில் நேற்று அதிகாலை கதிரேப்பள்ளி - பேரண்டப்பள்ளி இடையே 2 காட்டு யானைகள் நிற்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கிருஷ்ணகிரி மாவட்ட வன அலுவலர் தீபக் பில்கி தலைமையில் 60 வன ஊழியர்கள், டாக்டர்கள் கலைவாணன், மனோகரன், பிரசாத் தலைமையிலான குழுவினர் அங்கு சென்றனர்.
பின்னர் அவர்கள் அங்கு அட்டகாசம் செய்த காட்டு யானையை அடையாளம் கண்டனர். தொடர்ந்து மயக்க மருந்து ஊசியை துப்பாக்கியில் செலுத்தி அட்டகாசம் செய்து வந்த காட்டு யானை மீது சுட்டனர். முதலில் தொடர்ச்சியாக 2 ஊசிகள் போடப்பட்டன. இதன் பிறகு மீண்டும் 3-வது ஒரு ஊசி போடப்பட்டது. 3 ஊசிகள் போட்டதால் யானை சற்று மயக்கம் அடைந்தது.
இதைத் தொடர்ந்து கும்கி யானைகள் மாரியப்பன், பரணி உதவியுடனும், பொக்லைன் மூலமும் மயக்க மருந்து செலுத்தி பிடிக்கப்பட்ட யானை வனத்துறைக்கு சொந்தமான லாரியில் ஏற்றப்பட்டது. பிறகு அந்த யானையின் கழுத்து பகுதியில் ‘ரேடியோ காலார்‘ எனப்படும் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து யானை அங்கிருந்து கொண்டு செல்லப்பட்டது. மேலும் அந்த யானையுடன் சுற்றித்திரிந்த மற்றொரு யானை பட்டாசு வெடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கப்பட்டது.
தற்போது பிடிபட்டுள்ள காட்டு யானைக்கு லேசாக காயம் ஏற்பட்டுள்ளதால் அதற்கு கால்நடை மருத்துவ குழுவினர் ஓசூர் வனத்துறை அலுவலகத்தில் சிகிச்சை அளித்து வருகிறார்கள். காயம் குணம் அடைந்த பிறகு அந்த யானையை நீலகிரி மாவட்டம் முதுமலை அல்லது கோவை மாவட்டம் டாப்சிலிப் வனப்பகுதியில் கொண்டு சென்று விட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரி கிறது.
ஓசூர் சுற்று வட்டார பகுதியில் நீண்ட நாட்களாக அட்டகாசம் செய்து வந்த காட்டு யானை வனத்துறை யினரால் பிடிக்கப்பட்டதால் பொதுமக்களும், விவசாயிகளும் நிம்மதி அடைந்துள்ளனர்.
5 பேரை கொன்ற யானை
மயக்க ஊசி போட்டு பிடிக்கப்பட்டுள்ள காட்டு யானை 18 வயதுடைய ஆண் யானை ஆகும். இதற்கு 2 பெரிய தந்தங்கள் இருந்தன. கடந்த ஆண்டு ஓசூர் வனப்பகுதியில் சுற்றித்திரிந்த போது இதன் வலது புற தந்தம் பாறை ஒன்றில் மோதி உடைந்தது. இதனால் அந்த யானைக்கு இடதுபுற தந்தம் நீளமாகவும், வலது புற தந்தம் குட்டையாகவும் இருக்கும்.
இந்த யானை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சூளகிரி பகுதிக்கு வந்தது. அப்போது அங்கு அடுத்தடுத்து 3 நாட்கள் இந்த யானை சூளகிரி சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் ராஜப்பா, முனிராஜ், தேவன் ஆகிய 3 பேரையும் தூக்கி வீசி கொன்றது. கடந்த 5.2.2018 அன்று இந்த யானையை வனத்துறையினர் மயக்க ஊசி போட்டு பிடித்து, அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர். அதன் பிறகு மீண்டும் வந்த காட்டு யானை தற்போது விவசாயி அன்னையப்பா மற்றும் முனியம்மா ஆகியோரை தாக்கி கொன்றது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story