மீன்பிடி துறைமுக முகத்துவாரத்தை தூர்வாரக்கோரி காரைக்கால் மாவட்ட மீனவர்கள் வேலைநிறுத்தம்
காரைக்கால் மீன்பிடி துறைமுக முகத்துவாரத்தை தூர்வாரக் கோரி 11 மீனவ கிராம பஞ்சாயத்தார்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காரைக்கால்,
காரைக்கால் மாவட்டத்தில் 11 மீனவ கிராமங்கள் உள்ளன. இவர்கள் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர். இந்த நிலையில் முகத்துவார பகுதியில் மணல் மேடுகள் உருவாகி இருப்பதால் விசைப்படகுகள் கடலுக்குள் செல்வதில், மீன்பிடித்துவிட்டு துறைமுகத்துக்கு வருவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
எனவே முகத்துவாரத்தை தூர்வாரக்கோரி காரைக்கால் மாவட்ட மீனவர்கள் அரசுக்கு கோரிக்கைவைத்தனர். ஆனால் முகத்துவாரம் தூர்வாரப்படவில்லை. இதை கண்டித்து 11 மீனவ கிராம பஞ்சாயத்தார்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்த போராட்டம் குறித்து மீனவ பஞ்சாயத்தார்கள் கூறியதாவது:-
காரைக்கால் மீன்பிடி துறைமுக முகத்துவாரம் கடந்த 3 ஆண்டுகளாக தூர்வாரப்படவில்லை. கடலுக்குச் செல்லும் படகுகளும், கடலில் இருந்து மீண்டும் கரை திரும்பும் படகுகளும், முகத்துவாரத்தில் உள்ள மணல் மேடுகள் மற்றும் கல் குவியல்களில் சிக்கி சேதம் ஏற்படுகிறது. இதுகுறித்து பலமுறை மாவட்ட நிர்வாகத்திற்கும், அரசுக்கும் மீனவர்கள் கோரிக்கை விடுத்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. போர்க்கால அடிப்படையில் காரைக்கால் மீன்பிடி துறைமுக முகத்துவாரத்தை தூர்வார வேண்டும்.
மீனவர்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கின்ற வகையில் மீன்பிடி தொழிலுக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதித்திருப்பதை மீனவர்கள் ஏற்க முடியாது. எனவே ஜி.எஸ்.டி. வரியை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த 11 மீனவ கிராம பஞ்சாயத்துகள் ஆலோசித்து, காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம். இதனால் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Related Tags :
Next Story