தூத்துக்குடியில் காவலர் பணிக்கான தேர்வை 8,066 பேர் எழுதினர்
தூத்துக்குடி மாவட்டத்தில் 2-ம் நிலை காவலர் பணிக்கான எழுத்து தேர்வை 8 ஆயிரத்து 66 பேர் எழுதினர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் 2-ம் நிலை காவலர் பணிக்கான எழுத்து தேர்வை 8 ஆயிரத்து 66 பேர் எழுதினர்.
எழுத்து தேர்வு
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் தமிழக காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்பு துறை 2-ம் நிலை காவலர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இதற்கான தேர்வை எழுதுவதற்கு தூத்துக்குடி மாவட்டத்தில் 8 ஆயிரத்து 228 ஆண்கள், ஆயிரத்து 371 பெண்கள் உள்பட மொத்தம் 9 ஆயிரத்து 599 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.
இவர்களுக்கான எழுத்து தேர்வு நேற்று நடந்தது. இதற்காக தூத்துக்குடி மில்லர்புரம் பி.எம்.சி. மேல்நிலைப்பள்ளி, தூத்துக்குடி காமராஜ் கல்லூரி, காரப்பேட்டை நாடார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, மில்லர்புரம் புனித மேரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, சுப்பையா வித்யாலயா பெண்கள் மேல்நிலைப் பள்ளி, தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி, புனித தாமஸ் மேல்நிலைப்பள்ளி, புனித மரியன்னை மகளிர் கல்லூரி ஆகிய இடங்களில் நடந்தது.
8,066 பேர்
இந்த தேர்வு சமூகநீதி மற்றும் மனித உரிமை பிரிவு டி.ஐ.ஜி லலிதா லட்சுமி மேற்பார்வையில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்பாலகோபாலன் தலைமையில் கண்காணித்தனர். இந்த தேர்வை 6 ஆயிரத்து 990 ஆண்கள், ஆயிரத்து 76 பெண்கள் ஆக மொத்தம் 8 ஆயிரத்து 66 பேர் தேர்வு எழுதினர். மேலும் ஆயிரத்து 238 ஆண்கள், 295 பெண்கள் ஆக மொத்தம் ஆயிரத்து 533 பேர் தேர்வு எழுதவில்லை.
இந்த தேர்வு கண்காணிப்பு பணியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 31 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், 116 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், அமைச்சு பணியாளர்கள் உள்பட 843 பேர் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.
Related Tags :
Next Story