மாவட்ட செய்திகள்

திருச்செந்தூர் அருகேஇளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலைகாதல் கணவருடன் ஏற்பட்ட தகராறில் விபரீத முடிவு + "||" + Near Thiruchendur Young girl commits suicide by hanging

திருச்செந்தூர் அருகேஇளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலைகாதல் கணவருடன் ஏற்பட்ட தகராறில் விபரீத முடிவு

திருச்செந்தூர் அருகேஇளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலைகாதல் கணவருடன் ஏற்பட்ட தகராறில் விபரீத முடிவு
திருச்செந்தூர் அருகே காதல் கணவருடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருச்செந்தூர், 

திருச்செந்தூர் அருகே காதல் கணவருடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

காதல் திருமணம்

திருச்செந்தூர் அருகே உள்ள மணக்காடு அம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் கல்யாணகுமார். இவரின் மூத்த மகள் முத்துஜெயா (வயது 24). இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு வீரபாண்டியன்பட்டினம் பிரசாத் நகரை சேர்ந்த ஆனந்தகிருஷ்ணன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கவிபாரதி என்ற மகன் உள்ளார்.

தகராறு

கணவன்- மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இது தொடர்பாக திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டு இருந்தது. போலீசார் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் அவர்கள் அடைக்கலாபுரம் பிளோமி நகரில் தனியாக வீடு எடுத்து தங்கினர். அங்கும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்தது.

தூக்குப்போட்டு தற்கொலை

காதலித்து திருமணம் செய்த கணவருடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததால் முத்துஜெயா மனமுடைந்து காணப்பட்டு உள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத போது முத்துஜெயா, வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த திருச்செந்தூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். திருமணம் ஆகி 4 ஆண்டுகள் ஆவதால் இது குறித்து திருச்செந்தூர் உதவி கலெக்டர் தனப்பிரியா விசாரணை நடத்தி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. குடும்பத் தகராறில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை ஆர்.டி.ஓ. விசாரணை
குடும்பத் தகராறில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி ஆர்.டி.ஓ. விசாரித்து வருகிறார்.
2. திருமங்கலத்தில், இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை? கொலை என உறவினர்கள் போராட்டம்
திருமங்கலத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில், அவரை அடித்துக் கொலை செய்து விட்டதாக அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
3. உளுந்தூர்பேட்டை அருகே, இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
உளுந்தூர்பேட்டை அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.