மாவட்ட செய்திகள்

குளந்திரான்பட்டியில் காணாமல்போன குளத்தை மீட்க கறம்பக்குடி இளைஞர்களின் நூதன பிரசாரத்தால் பரபரப்பு + "||" + Missing in Kulantranpatti New campaign for youth of Karambakkudy to restore pond

குளந்திரான்பட்டியில் காணாமல்போன குளத்தை மீட்க கறம்பக்குடி இளைஞர்களின் நூதன பிரசாரத்தால் பரபரப்பு

குளந்திரான்பட்டியில் காணாமல்போன குளத்தை மீட்க கறம்பக்குடி இளைஞர்களின் நூதன பிரசாரத்தால் பரபரப்பு
குளந்திரான்பட்டியில் காணாமல்போன குளத்தை மீட்க கறம்பக்குடி இளைஞர்கள் நூதன முறையில் பிரசாரத்தில் ஈடுட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கறம்பக்குடி,

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே குளந்திரான்பட்டியில் சுமார் 7 ஏக்கரிலான வெட்டுக்குளத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு வரை மழை நீர் தேக்கி வைத்து அப்பகுதியில் விவசாயம் செய்யப்பட்டு வந்தது. பின்னர், படிப்படியாக சுற்றிலும் சாகுபடி செய்து வந்த சில விவசாயிகள், குளம் மற்றும் வாய்க்கால்களை ஆக்கிரமித்தனர். நாளடைவில் குளம் இருந்த சுவடே இல்லாத அளவுக்கு மாறி உள்ளது. இந்த குளம் மாயமானதால் அந்த பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளதோடு, இந்த குளத்தை நம்பி விவசாயம் செய்யப்பட்டு வந்த விளை நிலங்களில் பாசனம் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டன.


இந்நிலையில் காணாமல் போன இந்த குளத்தை கண்டுபிடித்து தூர்வார வேண்டுமென வலியுறுத்தி அப்பகுதி விவசாயிகள் கடந்த சில மாதங்களாக பல்வேறு துறை அலுவலர்களிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி நூதன முறையில் துண்டறிக்கைகளை வினியோகித்தும், பொது இடங்களில் ஒட்டியும் அப்பகுதி இளைஞர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நூதன பிரசாரம்

இதுகுறித்து நூதன பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள கருத்தாய்வு குழுவை சேர்ந்த துரை குணா கூறிகையில், முழுமையாக ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி உள்ள குளத்தை கண்டுபிடித்து தூர்வார வேண்டுமென கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அதற்கு முன்பு வருவாய்த்துறை அலுவலர்களிடம் பல முறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. கறம்பக்குடி வருவாய்த் துறை அலுவலர்கள் வந்து குளத்தை பார்வையிட்டு, குளம் காணாமல் போனதை உறுதி செய்தனர். ஆனால் அதை மீட்பதற்குரிய நடவடிக்கையை எடுக்கவில்லை.

இதனால்தான், அதிகாரிகள் கவனத்தை ஈர்ப்பதற்காக அமைச்சர், ஆளும் கட்சியினரின் பரிந்துரை இல்லாமல் சுயமரியாதை, தன்னொழுக்கம் உள்ள கலெக்டர், வருவாய் அலுவலர், கோட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலரை தேர்வு செய்வது போன்ற துண்டு பிரசுரத்தை அச்சடித்து நேற்றிலிருந்து வினியோகித்து வருகிறோம். அதை பொது இடங்களில் ஒட்டியுள்ளோம் என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கண்ணில் கருப்பு துணி கட்டி நூதன போராட்டம்
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக மதுக்கூரில் இஸ்லாமியர்கள் கண்ணில் கருப்பு துணி கட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2. குறைதீர்க்கும் நாள் கூட்டம்: வாலிபர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
கரூரில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வந்திருந்த வாலிபர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
3. மின் மயானத்தை திறக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நூதன போராட்டம்
மின் மயானத்தை திறக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் திருத்துறைப்பூண்டியில் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
4. கும்பகோணத்தில் கியாஸ் சிலிண்டருக்கு நாமம் போட்டு நூதன போராட்டம்
கும்பகோணத்தில் கியாஸ் சிலிண்டருக்கு நாமம் போட்டு காங்கிரஸ் கட்சியினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
5. ராமேசுவரம் வந்த சீன ஆசிரியரால் பரபரப்பு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டார்
ராமேசுவரத்துக்கு சாமி தரிசனம் செய்வதற்காக வந்த சீன ஆசிரியரால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர் அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை