இளையான்குடி அருகே உடல் கருகி வயலில் பிணமாக கிடந்த இளம்பெண்: காரணம் குறித்து போலீசார் விசாரணை
இளையான்குடி அருகே வயலில் இளம்பெண் உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்தார். இதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இளையான்குடி,
இளையான்குடி அருகே உள்ள சிங்கத்துரைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் திருமாறன் (வயது 30). இவருக்கும் முதுகுளத்தூர் தாலுகா விளக்கனேந்தலை சேர்ந்த குருசாமி மகள் முத்துபாண்டியம்மாள் (25) என்பவருக்கும் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இதையடுத்து முத்துபாண்டியம்மாளின் பெற்றோர், கணவர் வீட்டில் மகளை கொண்டு வந்து விட்டுச் சென்றனர். இந்தநிலையில் நேற்று காலை வீட்டின் அருகில் இருந்த வயலில் முத்துபாண்டியம்மாள் உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து கணவர் வீட்டார், பெண்ணின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதைத்தொடர்ந்து அங்கு வந்த குருசாமி, இளையான்குடி போலீசில் புகார் செய்தார். அதில் தனது மகளின் சாவு குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று தெரிவித்திருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து இளம் பெண் உடல் கருகி பிணமாக கிடந்த காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். திருமணமாகி 4 வருடங்களே ஆன நிலையில் பெண் கருகி பிணமாக கிடந்தது குறித்து வருவாய் கோட்டாட்சியர் செல்வகுமாரி மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

இவர்களுக்கு 9 மாதத்தில் ஆண்குழந்தை உள்ளது. கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டதன் காரணமாக, முத்துபாண்டியம்மாள், தனது பெற்றோர் வீட்டிற்கு குழந்தையுடன் சென்றுவிட்டார். கிருஷ்ணஜெயந்தி விழாவிற்கு மனைவியை போன் மூலமாக கணவர் வீட்டிற்கு அழைத்துள்ளார்.
இதையடுத்து முத்துபாண்டியம்மாளின் பெற்றோர், கணவர் வீட்டில் மகளை கொண்டு வந்து விட்டுச் சென்றனர். இந்தநிலையில் நேற்று காலை வீட்டின் அருகில் இருந்த வயலில் முத்துபாண்டியம்மாள் உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து கணவர் வீட்டார், பெண்ணின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதைத்தொடர்ந்து அங்கு வந்த குருசாமி, இளையான்குடி போலீசில் புகார் செய்தார். அதில் தனது மகளின் சாவு குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று தெரிவித்திருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து இளம் பெண் உடல் கருகி பிணமாக கிடந்த காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். திருமணமாகி 4 வருடங்களே ஆன நிலையில் பெண் கருகி பிணமாக கிடந்தது குறித்து வருவாய் கோட்டாட்சியர் செல்வகுமாரி மேல் விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story