திருவெற்றியூரில் மின்கம்பத்திற்கு ஒப்பாரி வைத்து நூதன போராட்டம்
திருவெற்றியூரில் புதிய மின்பாதை திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி மின்கம்பத்திற்கு மாலை அணிவித்து ஒப்பாரி வைத்து நூதன போராட்டத்தில் அந்த பகுதி மக்கள் ஈடுபட்டனர்.
தொண்டி,
ராமநாதபுரம் மாவட்டம் திருவெற்றியூர் மற்றும் சுற்று வட்டார பகுதிக்கு தொண்டி துணை மின் நிலையத்தில் இருந்து ஆதியூர் வழியாக மின்பாதை செல்கிறது. சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட மின் பாதை என்பதால் கடந்த பல வருடங்களுக்கு முன்பே மின்கம்பிகள் அதன் திறனை இழந்து விட்டது. இதனால் இப்பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது. லேசான காற்றடித்தால் கூட மின்கம்பிகள் அறுந்துவிழுந்து மின்தடை ஏற்பட்டு விடும். இதனால் பல நாட்கள் இரவு நேரங்களில் இப்பகுதியில் உள்ள பல கிராமங்கள் இருளில் மூழ்கி கிடக்கும் அவல நிலை இருந்து வருகிறது. இதுதொடர்பாக இந்த பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும், கோரிக்கை மனு அளித்தும் தீர்வு காண வலியுறுத்தி வருகின்றனர்.
அதனை தொடர்ந்து இந்த பகுதி உதய் மின் திட்டத்தில் சேர்க்கப்பட்டு கடந்த 2017-ம் ஆண்டு திருவெற்றியூருக்கு தொண்டி துணை மின் நிலையத்தில் இருந்து புதுப்பட்டினம் வீரசங்கிலி மடம் வழியாக புதிய மின் கம்பங்கள் நடப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை மின் இணைப்புகள் வழங்கப்படவில்லை. இதுகுறித்து இந்த பகுதி மக்கள் தொடர்ந்து பலமுறை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தும் பலனில்லை. தொடர்ந்து மின் பாதிப்பு பிரச்சினையை சந்தித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த மாதம் அரசின் கவனத்தை ஈர்க்கவும், இந்த திட்டத்தை விரைவாக நிறைவேற்ற கோரியும் திருவெற்றியூர் கிராம மக்கள் புதிதாக நடப்பட்டுள்ள மின்கம்பங்களில் மாலை அணிவித்து பூஜை செய்து வழிபடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் மின்வாரியம் பொதுமக்களின் போராட்டத்தை கண்டுகொள்ளவில்லை. அதனை தொடர்ந்து மீண்டும் அதிகாரிகளை சந்தித்து தங்களது கோரிக்கையை நிறைவேற்றித்தர வேண்டும் என வலியுறுத்தினர். ஆனாலும் அதிகாரிகள் தரப்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.
இதையடுத்து நேற்று காலை திருவெற்றியூர் கிராம பெண்கள் உள்பட ஏராளமானோர் மின் கம்பத்திற்கு மாலை அணிவித்து இறந்தவர்களுக்கு செய்யும் சடங்கு போல ஒப்பாரி வைக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது:-
புதிய மின் பாதை திட்டத்தை உடனே செயல்படுத்த வேண்டும் என பலமுறை மாவட்ட நிர்வாகத்திற்கும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கும் இந்த பகுதி மக்கள் சார்பில் வலியுறுத்தி வருகிறோம். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே புதிய மின் பாதைக்காக நடப்பட்ட மின்கம்பங்களுக்கு மாலை அணிவித்து ஒப்பாரி வைத்து மாரடிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.
உடனடியாக மின் இணைப்பு வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் மாவட்ட தலைநகரில் உள்ள மின்துறை நிர்வாக பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பெரிய அளவில் போராட்டம் நடத்துவது எனவும், அதிலும் நடவடிக்கை எடுக்காவிட்டால் மதுரையில் உள்ள தலைமை பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தவும் முடிவு செய்து உள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story