கோவை வெள்ளலூரில், ஓய்வு பெற்ற சி.ஆர்.பி.எப். வீரர் திராவகம் குடித்து தற்கொலை
கோவை வெள்ளலூரில் ஓய்வு பெற்ற சி.ஆர்.பி.எப். வீரர் திராவகம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
போத்தனூர்,
கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்தவர் ரெய்மான் ரோஸ் (வயது 50). இவருடைய மனைவி சுனிதா ரோஸ். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். ரெய்மான் ரோஸ் சி.ஆர்.பி.எப். வீரர் ஆவார். இவர் கோவை வெள்ளலூரில் உள்ள சி.ஆர்.பி.எப். முகாமில் தனது குடும்பத்துடன் தங்கி இருந்து அங்கு பணியாற்றி வந்தார். சுனிதா ரோசும் போலீஸ் ஆவார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரெய்மான் ரோஸ் விருப்ப ஓய்வு பெற்றார். இதைத்தொடர்ந்து அவர் தனது மனைவியிடம் வேலையை ராஜினாமா செய்துவிடு. நாம் குடும்பத்துடன் சொந்த ஊருக்கு சென்று அங்கு வாழலாம் என்று கூறினார். அதற்கு அவர் சம்மதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதன் காரணமாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த ரெய்மான் ரோஸ் வீட்டில் இருந்த திராவகத்தை (ஆசிட்) எடுத்து குடித்துவிட்டு மயங்கினார். இதையடுத்து அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி ரெய்மான் ரோஸ் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story