ஒட்டன்சத்திரம் அருகே, தண்டவாளத்தில் ஆண் பிணம் - போலீசார் விசாரணை


ஒட்டன்சத்திரம் அருகே, தண்டவாளத்தில் ஆண் பிணம் - போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 25 Aug 2019 10:30 PM GMT (Updated: 2019-08-26T05:31:00+05:30)

ஒட்டன்சத்திரம் அருகே, தண்டவாளத்தில் கிடந்த ஆண் பிணத்தை போலீசார் கைப்பற்றிய விசாரணை நடத்தி வருகின்றனர்.

பழனி, 

ஒட்டன்சத்திரம் அருகே திண்டுக்கல்-பழனி சாலையில் ரெயில்வே கேட் பகுதியில் நேற்று காலை தண்டவாளத்தில் 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். இதுகுறித்து பழனி ரெயில்வே போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது அவர் கை துண்டாகி, முகம் சிதைந்த நிலையில் கிடந்தார். இதையடுத்து பிணத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிணமாக கிடந்தவர் மொட்டை போட்டிருந்தார். அதோடு அவரின் சட்டை காலரில் திருச்சி தையல் கடை முகவரி இருந்தது. எனவே அவர் திருச்சி பகுதியை சேர்ந்தவராக இருக்கலாம் என்றும், பழனிக்கு முடிகாணிக்கை செலுத்த வந்திருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் அவர் தற்கொலை செய்தாரா? என்று போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story