மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை கண்டித்து, ஆட்டோ-கார் டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்
மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை கண்டித்து திண்டுக்கல்லில் ஆட்டோ, கார், வேன் டிரைவர்கள் மற்றும் மெக்கானிக்குகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மத்திய அரசு மோட்டார் வாகன சட்டத்தை திருத்தம் செய்யும் மசோதாவை, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. இதன்மூலம் வாகன பதிவு கட்டணம் மற்றும் வாகன புதுப்பித்தல் கட்டணம் கடுமையாக உயர்ந்துள்ளது. இதனை கண்டித்து திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் அருகே சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு சி.ஐ.டி.யு. ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் முருகேசன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் பிரபாகரன், செயலாளர் கே.ஆர்.கணேசன் மற்றும் சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் தனசாமி, உரிமைக்குரல் வாகன ஓட்டுனர்கள் சங்க நிர்வாகி தண்டபாணி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
அப்போது மோட்டார் வாகன சட்ட திருத்தத்தால் வாகன உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழில் முற்றிலும் பாதிக்கும். இதனால் தற்போது 3 கோடி பேர் வேலை இழந்துள்ள நிலையில், மேலும் 7 கோடி பேர் வேலை இழக்கும் அபாயம் உள்ளது. மேலும் வாகன பதிவு கட்டணம், வாகன புதுப்பித்தல் கட்டணம் உயர்வால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுவார்கள்.
எனவே, மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங் களை எழுப்பினர். இதில் சி.ஐ.டி.யு. ஆட்டோ தொழிலாளர் சங்கம், சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம், உரிமைக்குரல் வாகன ஓட்டுனர்கள் சங்கம், இருசக்கர வாகன பழுதுநீக்குவோர் சங்கம் ஆகியவற்றின் நிர்வாகிகள் மற்றும் ஆட்டோ, கார், வேன் டிரைவர்கள், மெக்கானிக் குகள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story