ஊதிய உயர்வு வழங்க வலியுறுத்தி 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தினர் பிரசார இயக்கம்


ஊதிய உயர்வு வழங்க வலியுறுத்தி 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தினர் பிரசார இயக்கம்
x
தினத்தந்தி 27 Aug 2019 4:15 AM IST (Updated: 27 Aug 2019 12:21 AM IST)
t-max-icont-min-icon

ஊதிய உயர்வு வழங்க வலியுறுத்தி திருவாரூரில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் பிரசார இயக்கம் நடந்தது.

திருவாரூர்,

108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு பிரச்சினை நீண்ட காலமாக நீடித்து வருகிறது. இந்த நிலையில் இந்த மாதத்திற்கு ரூ.270 கோடியை 108 ஆம்புலன்ஸ் சேவை நடத்தி வரும் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த பணத்தை தொழிலாளர்களுக்கு தராமல் இருந்து வருகிறது. எனவே அரசு வழங்கிய பணத்தை தொழிலாளர்களுக்கு வழங்கப்படாமல் இருப்பதை கண்டித்தும், உடனடியாக ஊதிய உயர்வு வழங்க வலியுறுத்தி 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் மக்கள் சந்திப்பு பிரசார இயக்கம் நடந்தது. இதற்கு மண்டல தலைவர் வேதராஜ் தலைமை தாங்கினார்.

இதில் மாவட்ட செயலாளர் பாஸ்கரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது மக்களிடத்தில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களின் ஊதிய பிரச்சினை குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கினர்.

Next Story