கும்பகோணம் பகுதியில் உள்ள கோவில்களில், 4-வது நாளாக போலீசார் கண்காணிப்பு பணி
கும்பகோணம் பகுதியில் உள்ள கோவில்களில் 4-வது நாளாக போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
கும்பகோணம்,
தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவியிருப்பதாக வந்த எச்சரிக்கையை அடுத்து தமிழகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதன்படி கும்பகோணம் பகுதியில் உள்ள கோவில்களில் தொடர்ந்து நேற்று 4-வது நாளாக போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் சோதனை செய்த பின்னர் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
இதில் கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவில், சாரங்கபாணி கோவில் உள்ளிட்ட கோவில்களில் போலீசார் 4-வது நாளாக தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
போலீசார் பாதுகாப்பு
மேலும் கும்பகோணம் பகுதியிலுள்ள மசூதிகள், கிறிஸ்தவ தேவாலயங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதேபோல் பொதுமக்கள் அதிகம் கூடும் கும்பகோணம் பஸ் நிலையம், ரெயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

Related Tags :
Next Story