உடையவர் தீயனூரில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற கோரி அரியலூர் கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
உடையவர் தீயனூரில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று அரியலூர் கலெக்டரிடம், அந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் மனு கொடுத்தனர். அந்த டாஸ்மாக் கடையை அகற்ற கூடாது என்று மது பிரியர்களும் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
அரியலூர்,
அரியலூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் டி.ஜி.வினய் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினார். அரியலூர் மாவட்டம் உடையவர் தீயனூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையை சுற்றி, பெருமாள் தீயனூர், உடையவர் தீயனூர், செங்கழி, மலைமேடு, அம்பலர் கட்டளை ஆகிய கிராமங்கள் அமைந்துள்ளன.
இந்த கடை வழியாக தான் சுற்று வட்டார கிராமங்களிலிருந்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ- மாணவிகளும், ஆசிரியர்களும், பேராசிரியர்களும், விவசாய கூலி வேலை செய்யும் பெண்களும் சென்று வருகின்றனர். அந்த டாஸ்மாக் கடையில் மதுபிரியர்கள் மது வாங்கி குடித்து விட்டு போதையில் அந்த வழியாக செல்வோரிடம் தகராறில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அந்த டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று கூறியிருந்தனர்.
அகற்றக்கூடாது...
இதற்கிடையே உடையவர் தீயனூர் கிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மதுபிரியர்களில் சிலர் அந்த டாஸ்மாக் கடையை அகற்றக்கூடாது என்று கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்தனர். அதில் எங்கள் கிராமத்தில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையை அகற்றினால் மது வாங்க 20 கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே கடையை அகற்ற கூடாது என்று கூறியிருந்தனர்.
இதேபோல தா.பழூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த மாட்டு வண்டி தொழிலாளர்கள் கொடுத்த மனுவில், தா.பழூர் ஒன்றியத்திற்குட்பட்ட வேம்புகுடி (கிழக்கு), குடிகாடு, காரைக்குறிச்சி, அணைக்கடி மற்றும் ஆண்டிமடம், ஜெயங்கொண்டம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாட்டு வண்டி தொழிலாளர்கள் உள்ளனர். மாட்டு வண்டி தொழிலாளர்களின் வாழ்க்கை மேம்பட உடனடியாக கொள்ளிடம் ஆற்றில் மணல் அள்ள அனுமதி அளித்தும், மணல் குவாரி அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
867 மனுக்கள்
கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாற்றம், தொழில் தொடங்க கடனுதவி, வேலைவாய்ப்பு, வீட்டுமனைப்பட்டா உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 867 மனுக்களை கலெக்டர் பெற்று கொண்டார். அந்த மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட அலுவலர் களிடம் விவரங்களை கேட்டறிந்து குறித்த காலத்திற்குள், மனுக்களின் மீது தக்க நடவடிக்கை மேற்கொண்டு, மனுதாரருக்கு உரிய பதிலை அளிக்குமாறு கலெக்டர் அலுவலர்களை அறிவுறுத்தினார்.

Related Tags :
Next Story