சதுர்த்தி விழாவையொட்டி விநாயகர் சிலை அமைக்க அனுமதி கோரி விண்ணப்பிக்கலாம்


சதுர்த்தி விழாவையொட்டி விநாயகர் சிலை அமைக்க அனுமதி கோரி விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 26 Aug 2019 10:15 PM GMT (Updated: 26 Aug 2019 7:34 PM GMT)

புதுக்கோட்டை மாவட்டத்தில் சதுர்த்தி விழாவையொட்டி விநாயகர் சிலை அமைக்க அனுமதி கோரி விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் உமா மகேஸ்வரி தெரிவித்து உள்ளார்.

புதுக்கோட்டை,

விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுவது குறித்து அரசு தெரிவித்து உள்ள வழிகாட்டுதலின்படி, விநாயகர் சிலை அமைப்பதற்கு அனுமதி கோரி விண்ணப்பிக்கும் விழா அமைப்பாளர்கள் உரிய படிவத்தை சம்பந்தப்பட்ட வருவாய் கோட்ட அலுவலர்களிடம் விண்ணப்பிக்க வேண்டும்.

பட்டா இடமெனில், சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்களிடம், பொது இடங்களில் சிலை வைப்பதற்கு தடையில்லா சான்று சம்பந்தப்பட்ட ஊராட்சிகள், நகராட்சிகள், நெடுஞ்சாலை, பொதுப்பணித்துறை அலுவலகங்களில் இருந்து பெற வேண்டும். சம்பந்தப்பட்ட போலீஸ் நிலைய அலுவலரிடமிருந்து ஒலி பெருக்கி உரிமம், அனுமதி உள்ளிட்ட தடையில்லா சான்று பெறப்பட வேண்டும்.

தற்காலிகமாக மின் இணைப்பு

சம்பந்தப்பட்ட தீயணைப்பு நிலைய அலுவலகத்திடம் இருந்து தீ பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் சிலையை நிறுவுவதற்கு தற்காலிகமான ஏற்பாடுகள் செய்து தடையில்லா சான்று பெறப்பட வேண்டும். மின் இணைப்பு விபர கடிதம் மற்றும் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் இருந்து சிலை அமைக்க கோரும் இடத்திற்கு தற்காலிகமாக மின் இணைப்பு பெற அனுமதி பெறப்பட வேண்டும்.

விண்ணப்ப படிவம் மற்றும் மேற்கண்ட அலுவலர்களிடம் இருந்து பெறப்பட்ட தடையில்லா சான்று ஆகியவற்றை பரிசீலனை செய்து, சம்பந்தப்பட்ட வருவாய் கோட்ட அலுவலர்களால் அரசாணை படிவம் (2) இணைப்பில் உள்ள வழிகாட்டுதலின்படி அனுமதி வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Next Story