மதுரை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்சம்: அதிகாரி உள்பட 5 பேர் பணியிடை நீக்கம்; 2 பேர் இடமாற்றம் செய்யப்பட்டனர்
லஞ்சம் வாங்கியதாக மதுரை வட்டார போக்குவரத்து அலுவலக ஊழியர்கள் 5 பேர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர். 2 பேர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
மதுரை,
மதுரை நகரில் மத்தி, தெற்கு, வடக்கு என 3 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக் கானோர் வந்து செல்கின்றனர். இங்கு பல வகையான வாகனங்களை ஓட்டுவதற் கான ஓட்டுனர் உரிமம், பழகுனர் உரிமம், வாகன பதிவு எண் போன்றவை பெறுவதற்காக ஏராளமா னோர் வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில், மதுரை வடக்கு வட்டார போக்கு வரத்து அலுவலகத்திற்கு வருவோரிடம், விரைவாக ஓட்டுனர் உரிமம் பெற்று தருவதாகவும், அதற்கு லஞ்சம் கொடுக்க வேண்டும் என்றும் சில அதிகாரிகள் மற்றும் அங்கு பணியாற்றும் தற்காலிக ஊழியர்கள் கூறியதுடன், போலி ஆவணங்கள் மூலம் ஓட்டுனர் உரிமங்களும் வாங்கி கொடுத்துள்ளனர்.
இதுகுறித்து, போக்குவரத்து கமிஷனர் சமயமூர்த்தியிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர், மதுரையில் உள்ள லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு சத்தியசீலனுக்கு தகவல் தெரிவித்தார். அவர் தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் உள்ள ஆவணங்களை சோதனை செய்தனர். அப்போது அதில், லஞ்சம் பெற்று கொண்டு பல்வேறு முறைகேடுகளில் அதிகாரிகள் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து அங்கு பணிபுரியும் மேற்பார்வையாளர் ஒலினா, அலுவலக உதவியாளர்கள் ஹரி, கணேசன் மற்றும் தற்காலிக ஊழியர்களான செல்வராஜ், ஆனந்தன் ஆகிய 5 பேரும் இந்த குற்றச் செயல்களில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மேற்பார்வை யாளர் ஒலினா, நிரந்த ஊழியர்கள் 2 பேரையும் போக்குவரத்து ஆணையர் சமயமூர்த்தி பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். தற்காலிக ஊழியர்களும் பணியிடைநீக்கம் செய்யப் பட்டனர்.
மேலும் இதற்கு உடந்தையாக இருந்த நெல்லியப்பன், சக்திவேல் ஆகியோரை இடமாற்றம் செய்தும் அவர் உத்தரவிட்டார். பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவத்தால், வட்டார போக்குவரத்து அலுவலகங் களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story