மந்திரி பதவிக்காக ஜெய்தத் சிர்சாகர் ரூ.50 கோடி லஞ்சம் கொடுத்தார் உறவினர் குற்றச்சாட்டால் பரபரப்பு
மந்திரி பதவிக்காக சிவசேனாவை சேர்ந்த ஜெய்தத் சிர்சாகர் ரூ. 50 கோடி லஞ்சம் கொடுத்ததாக அவரின் உறவினர் சந்திப் சிர்சாகர் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.
மும்பை,
மராட்டியத்தில் வரும் அக்டோபர் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் முக்கிய எதிர்க் கட்சிகளான காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளில் இருந்து பல்வேறு எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் தொடர்ந்து ஆளும் பா.ஜனதா மற்றும் சிவசேனாவிற்கு கட்சி தாவி வருகின்றனர்.
இதேபோல் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் எம்.எல்.ஏ.வாக பதவி வகித்து வந்த ஜெய்தத் சிர்சாகர் கடந்த மே மாதம் தனது பதவியை ராஜினாமா செய்ததுடன் கட்சியில் இருந்து விலகி சிவசேனாவில் இணைந்தார்.
இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் மந்திரிசபை விரிவாக்கத்தின்போது ஜெய்தத் சிர்சாகருக்கும் பதவி வழங்கப்பட்டது. வேலைவாய்ப்பு உத்தரவாதம் மற்றும் தோட்டக்கலை இலாகா அவருக்கு ஒதுக்கப்பட்டது. எம்.எல்.ஏ.பதவியில் இருந்து விலகி கட்சி மாறியவருக்கு மந்திரி பதவி வழங்கப்பட்டது சர்ச்சைக்குள்ளானது.
இந்த நிலையில் சட்டசபை தேர்தலையொட்டி தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் சிவ் சுவராஜ்யா யாத்ரா என்ற பெயரில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. பீட் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட ஜெய்தத் சிர்சாகரின் உறவினரான சந்தீப் சிர்சாகர் மந்திரி பதவிக்காக ஜெய்தத் சிர்சாகர் ரூ.50 கோடி லஞ்சம் கொடுத்ததாக குற்றம்சாட்டினார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், ‘எனது உறவினர் ஜெய்தத் சிர்சாகர் மந்திரி பதவியை பெறுவதற்காக ரூ.50 கோடியை வழங்கினார். இந்த பணத்தை கொண்டு பீட் மாவட்டத்தின் முகத்தையே மாற்றியிருக்கலாம்‘ என கூறினார்.
இந்த கூட்டத்தில் மேல்- சபை எதிர்க்கட்சி தலைவர் தனஞ்செய் முண்டே மற்றும் சிருர் நாடாளுமன்ற தொகுதி எம்.பி. அமோல் கோலே உள்ளிட்ட தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்துகொண்டனர்.
மந்திரி பதவிக்காக ஜெய்தத் சிர்சாகர் ரூ.50 கோடி லஞ்சம் வழங்கியதாக அவரது உறவினரே குற்றம்சாட்டி இருப்பது மராட்டிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story