மாட்டு கொட்டகையில் பதுக்கிய ரூ.5 லட்சம் எரிசாராயம் பறிமுதல் பெண் கைது
சீர்காழி அருகே மாட்டு கொட்டகையில் பதுக்கிய ரூ.5 லட்சம் மதிப்பிலான எரிசாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சீர்காழி,
நாகை மாவட்டம் சீர்காழி அருகே எடகுடிவடபாதி கிராமத்தைச் சேர்ந்த மணி. இவருடைய மனைவி அஞ்சம்மாள்(வயது50). இவருக்கு சொந்தமான மாட்டு கொட்டகையில் புதுச்சேரியில் இருந்து கடத்தி வரப்பட்ட எரிசாராயம் வைக்கோல்போரில் மறைத்து வைத்திருப்பதாக விழுப்புரம் மண்டல மத்திய புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் நேற்று விழுப்புரத்தில் இருந்து போலீசார் எடகுடிவடபாதி கிராமத்துக்கு நேரில் வந்து அஞ்சமாளுக்கு சொந்தமான மாட்டு கொட்டகையில் சோதனை செய்தனர். சோதனையின் போது அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 47 எரிசாராயம் நிரம்பிய கேன்களை பறிமுதல் செய்தனர். மேலும் இடத்தின் உரிமையாளர் அஞ்சம்மாளை போலீசார் கைது செய்து சீர்காழி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
ரூ.5 லட்சம்
விசாரணையில் ஆர்ப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த பெண் சாராய வியாபாரி ஒருவருக்காக எருக்கூர் கிராமத்தை சேர்ந்த கலியமூர்த்தி மகன் வளையாபதி என்பவர் அஞ்சம்மாள் இடத்தில் எரிசாராயம் நிரம்பிய கேன்களை பதுக்கி வைத்தது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட அஞ்சம்மாள் சீர்காழி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய பெண் சாராய வியாபாரி ஒருவரையும், எரிசாராயத்தை பதுக்கிய வளையாபதி என்பவரையும் போலீசார் தேடி வருகிறார்கள். பறிமுதல் செய்யப்பட்ட எரிசாராயத்தின் மதிப்பு ரூ.5 லட்சம் என கூறப்படுகிறது.

Related Tags :
Next Story