ஆரணியை தலைமையிடமாக கொண்டு, புதிய மாவட்டம் அமைக்க வலியுறுத்தி கையெழுத்து இயக்கம்
ஆரணியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வலியுறுத்தி 1 லட்சம் பேரிடம் கையெழுத்து பெறும் இயக்கத்தை சிறு, குறு வியாபாரிகள் தொடங்கியுள்ளனர்.
ஆரணி,
சுதந்திர தின விழாவின்போது வேலூர் மாவட்டம் 3 ஆக பிரிக்கப்படுவதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதேபோல் விழுப்புரம் மாவட்டமும் 2 ஆக பிரிக்கப்பட்டது. அதன்படி ஆரணியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார். இந்த கோரிக்கைக்கு வலு சேர்க்கும் வகையில் ஆரணி நகரில் 1 லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்கும் இயக்கத்தை சிறு, குறு வியாபாரிகள் தொடங்கியுள்ளனர்.
அதன்படி நேற்று ஆரணி அண்ணா சிலை அருகே சிறு, குறு, பெரு வியாபாரிகள் சங்கத் தலைவர் அருண்குமார் தலைமையில் சங்க நிர்வாகிகள் அவ்வழியாக செல்லும் பொதுமக்களிடத்திலும், அனைத்து வியாபாரிகளிடத்திலும், அனைத்து சமூக தொண்டு நிறுவன பொறுப்பாளர்களிடமும் கையெழுத்துகளை பெற்று வருகின்றனர். இதனை முதல்-அமைச்சரிடம் வழங்க உள்ளனர்.
இதனிடையே கையெழுத்து இயக்கம் நடத்துவது குறித்து அவர்கள் ஆரணி வருவாய் கோட்டாட்சியர் இல.மைதிலியிடம் மனு ஒன்றை வழங்கினர்.
Related Tags :
Next Story