திருப்பூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்
திருப்பூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்ட தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் ஆர்.டி.ஓ. அலுவலக வளாகத்தில் நேற்று காலை காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு மாவட்ட செயலாளர் ராஜேஷ் தலைமை தாங்கினார். பொருளாளர் காளியப்பன் முன்னிலை வகித்தார்.
நிர்வாகிகள் ஜார்ஜ் வர்கீஸ், செல்வக்குமார், சந்திரகலா, கோபால், பாண்டியன் உள்பட திரளானவர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர். தமிழக அரசு உத்தரவுப்படி மாற்றுத்திறனாளிகளுக்கு குறைதீர்க்கும் கூட்டத்தை ஒவ்வொரு மாதமும் செவ்வாய்க்கிழமைதோறும் நடத்த வேண்டும். குறைதீர்க்கும் நாள் அன்று அரசு டாக்டர்களை வரவழைத்து அடையாள சான்று, பஸ் பாஸ், ரெயிலில் செல்வதற்கான பாஸ் உள்ளிட்டவற்றை அங்கேயே வழங்க வேண்டும். மாநில வருவாய் நிர்வாக ஆணையாளர் உத்தரவுப்படி மாற்றுத்திறனாளிக்கு தாசில்தார்கள் உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் கூலியும், 4 மணி நேர வேலையும் வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா, தொகுப்பு வீடு அவர்கள் வசிக்கும் பகுதியில் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.
பின்னர் ஆர்.டி.ஓ. அலுவலக அதிகாரிகள் வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பின்னர் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அதிகாரிகளிடம் கொடுத்து விட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

Related Tags :
Next Story