அனுமதிக்கப்பட்ட நீர்நிலைகளில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும் - கலெக்டர் அறிவுறுத்தல்


அனுமதிக்கப்பட்ட நீர்நிலைகளில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும் - கலெக்டர் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 28 Aug 2019 3:45 AM IST (Updated: 27 Aug 2019 9:26 PM IST)
t-max-icont-min-icon

அனுமதிக்கப்பட்ட நீர்நிலைகளில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும் என்று கலெக்டர் வீரராகவராவ் அறிவுறுத்தி உள்ளார்.

ராமநாதபுரம்,

கலெக்டர் வீரராகவராவ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களின் போது மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் ஆகியவற்றின் வழிமுறைகளை பின்பற்றுவது நமது நீர் நிலைகள் மாசடைவதை தடுக்க மிகவும் பேருதவியாக அமையும். விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களில் பயன்படுத்தப்படும் விநாயகர் சிலைகள் களிமண்ணால் செய்யப்பட்டு சுடப்படாததாகவோ, கிழங்கு மாவு போன்ற வேதிப்பொருட்கள் கலக்காத மூலப்பொருட்களை கொண்டோ தயாரிக்கப்பட வேண்டும். இவற்றில் பூசப்படும் வர்ணங்கள் நீரில் கரையும் தன்மையுடையதாகவும், எவ்வித நச்சுச்தன்மை இல்லாததுமாக இயற்கை வர்ணங்களை உடையதாகவும் இருத்தல் வேண்டும். நச்சுத்தன்மையுடைய, மக்கும் தன்மையற்ற வேதிப்பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் வர்ணங்களை விநாயகர் சிலைகளில் பயன்படுத்துதல் கூடாது.

விநாயகர் சிலைகள் போலீசாரால் அனுமதி அளிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே நிறுவப்பட வேண்டும். விநாயகர் சிலை நிறுவப்பட்டுள்ள இடம் மற்றும் ஊர்வலங்களில் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை பயன்படுத்தக்கூடாது. மேலும் ஊர்வலம் மாலை 6 மணிக்கு மேல் மேற்கொள்ளக்கூடாது. விநாயகர் சிலைகள் அனுமதி அளிக்கப்பட்ட நீர்நிலைகளில் மட்டுமே கரைக்க வேண்டும். சிலைகளை நீர் நிலைகளில் கரைக்கும் முன்னர் அவற்றில் காணப்படும் பூக்கள், மாலை, இலை, துணி மற்றும் பிற ஆபரணங்கள் நீக்கப்பட வேண்டும். இவற்றில் மக்கும் பொருட்களை உரமாக்கி பயன்படுத்தலாம்.

மாவட்டத்தில் தொண்டி கடற்கரை, பாசிப்பட்டினம் கடற்கரை, தாமோதிரப்பட்டினம் கடற்கரை, திருப்பாலைக்குடி கடற்கரை, தெற்கு வளமாவூர் கடற்கரை, உப்பூர் மோர்பண்ணை கடற்கரை, தேவிப்பட்டினம் நவபாஷன கடற்கரை, முடிவீரன்பட்டினம் கடற்கரை, ராமநாதபுரம் நொச்சிவயல் ஊருணி, வெள்ளரி ஓடை ஊருணி, தலைதோப்பு கடற்கரை, வேலுநகர் ஊருணி, ஆற்றங்கரை ஆறு மற்றும் கடல், தர்காவலசை கடற்கரை, பிரப்பன்வலசை கடற்கரை, மண்டபம் கடற்கரை, பாம்பன் பாலம் கடற்கரை, தங்கச்சிமடம் வில்லுண்டி தீர்த்தம்.

ராமேசுவரம் அக்னி தீர்த்த கடற்கரை, கீழக்கரை அலவாக்கரைவாடி கடற்கரை, சின்ன மாயகுளம் கடற்கரை, சின்ன ஏர்வாடி கடற்கரை, கொட்டக்குடி ஆறு, குதக்கோட்டை பெரிய ஊருணி, பெரியப்பட்டணம் இந்திரா நகர் கடற்கரை, முத்துப்பேட்டை கடற்கரை, களிமண்குண்டு சண்முகவேல்பட்டினம் கடற்கரை, உத்திரகோசமங்கை வராகி அம்மன் கோவில் ஊருணி, பரமக்குடி பெருமாள் கோவில் அருகில் வைகை ஆறு, கமுதி செட்டியூரணி, ராமசாமிபட்டி வேலுவூரணி, மேலமுந்தல் கடற்கரை, வாலிநோக்கம் கடற்கரை, எஸ்.மாரியூர் கடற்கரை, நரிப்பையூர் கடற்கரை, திருவரங்கம் அம்பலத்தான் ஊருணி, முதுகுளத்தூரில் புளியன்குடி கண்மாய், பெரிய ஊருணி மற்றும் சங்கரபாண்டி ஊருணி ஆகிய இடங்களில் விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும். இவ்வாறு அனுமதி தரப்பட்ட இடங்களில் மட்டுமே சிலைகளை கரைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story