கரும்பு ஆராய்ச்சி மையத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி: கலெக்டர் வழியனுப்பி வைத்தார்
கரும்பு ஆராய்ச்சி மையத்தில் பயிற்சிக்காக செல்லும் விவசாயிகளை கலெக்டர் வழியனுப்பி வைத்தார்.
சிவகங்கை,
மாவட்டத்தில் கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு அட்மா திட்டத்தின்கீழ் கரும்பு ஆராய்ச்சி மையத்தில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதையொட்டி கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தனி பஸ்சில் புறப்பட்டு சென்ற விவசாயிகளின் பயணத்தை கலெக்டர் ஜெயகாந்தன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். அவர்களை வழியனுப்பி வைத்த பின்பு கலெக்டர் கூறியதாவது:-
வேளாண்மைத்துறை மூலம் செயல்படுத்தப்படும் அட்மா திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு புதிய தொழில்நுட்ப பயிர் சாகுபடி பயிற்சி அளிக்கப்படுகிறது. விவசாயிகள் இந்த முறைகளை நேரடியாக பார்த்து தெரிந்துக்கொள்ள பிற இடங்களில் உள்ள ஆராய்ச்சி மையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு பயிற்சி வழங்கப்படு கிறது. அங்கு பயிற்சி பெற்ற விவசாயிகள் நமது மாவட்டத்தில் புதிய தொழில்நுட்பத்தினை கடைபிடித்து பயன்பெற்று வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக நமது மாவட்டத்தில் தற்போது கரும்பு சாகுபடி செய்யும் 40 விவசாயிகளுக்கு திருச்சி மாவட்டம் சிறுகமணியில் செயல்பட்டு வரும் கரும்பு ஆராய்ச்சி மையத்தில் கரும்பு சாகுபடியில் புதிய தொழில்நுட்ப முறைகள், ரகங்கள், பூச்சி நோய் மேலாண்மை நீடித்த நிலையான கரும்பு சாகுபடி முறை, கரும்பில் சொட்டு நீர் பாசனம் ஆகியவை குறித்து தெரிந்து கொண்டு பயன் பெறும் வகையில் அவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது. இந்த பயிற்சி 3 நாட்கள் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்
நிகழ்ச்சியில் சிவகங்கை வேளாண்மை இணை இயக்குனர் கணேசன், வேளாண்மை அலுவலர் பரமேஸ்வரன், அட்மா திட்ட பணியாளர்கள் தம்பிதுரை, அருண்மொழி, திவ்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story