உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் தமிழகம் முதல் இடம் - துணைவேந்தர் பேச்சு
உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் தமிழகம் முதல் இடத்தில் இருக்கிறது என்று அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பேசினார்.
காரைக்குடி,
மாநில ரூசா திட்ட இயக்குனரகம், அழகப்பா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு முனையம் ஆகியவற்றின் சார்பில் தமிழக அரசின் உயர்கல்வித்துறையின் வழிகாட்டு தலின்படி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் தொடக்க விழா காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது.
இந்த பயிற்சி முகாம் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள அழகப்பா பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்றுள்ள 11 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 3 மாதங்கள் நடைபெறவுள்ளன. இதன் தொடக்க விழாவில் அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:- உயர்கல்வி சேர்க்கை விகிதத்தில் தமிழகம் நாட்டில் முதலிடத்தில் உள்ளது. ஆகையால், தமிழகத்தில் உயர்கல்வி பெரும் அனைவரையும், வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முனைவு திறன் பெற்றவர்களாக உருவாக்குவதே நமது தலையாய கடமையாகும்.
ஏனெனில், எதிர்கால இந்தியா வளர்ச்சி திறன் பெற்ற இளைஞர்களின் கையில் தான் உள்ளது. இதை மனதில் கொண்டே, இந்த திறன் மேம்பாட்டு முகாமில், சூரிய மின் பொறியாளர், வலையமைப்பு நிர்வாக பொறியாளர், கணக்குப்பதிவியல் நிர்வாகி, வரவேற்பு அலுவலக நிர்வாகி, பேன் டிசைனர் மற்றும் திருமண அலங்கார வல்லுனர் ஆகிய 6 பிரிவுகளில் மொத்தம் 1,250 இளநிலை 3-ம் ஆண்டு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
சுமார் ரூ.52 லட்சம் மதிப்பில் நடத்தப்படும் இந்த பயிற்சிகளை வழங்குவதற்காக, அழகப்பா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்களோடு, தேசிய திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் தமிழக திறன் மேம்பாட்டு கழகங்களின் அங்கீகாரம் பெற்ற பி.எஸ்.என்.எல்., ஐ.எல்.எப்.எஸ். உள்ளிட்ட நிறுவனங்களின் பயிற்றுனர்கள் ஈடுபட உள்ளனர்.
முகாமில் பயிற்சி பெறும் அனைத்து மாணவர்களும், பல்கலைக்கழகத்தின் சான்றிதழ் வழங்கப்படும். அதைத்கொண்டு மாணவர்கள் வேலைவாய்ப்பு பெறுபவர்களாக மட்டுமல்லாமல் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் தொழில் முனைவோர்களாகவும் வளரவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இதில் அழகப்பா பல்கலைக்கழக தொழில்முனைவு, ஆராய்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு துறை இயக்குனர் தர்மலிங்கம், பல்கலைக்கழக கல்லூரி வளர்ச்சிக் குழும பேராசிரியர் கண்ணபிரான், ரூசா திட்ட ஒருங்கிணைப்பாளர் சஞ்ஜீவ்குமார்சிங், அழகப்பா அரசு கலைக் கல்லூரி முதல்வர் துரை உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் முகாம் ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன் நன்றி கூறினார்.

Related Tags :
Next Story