துணை முதல்-மந்திரிகள் தேவையில்லை: பா.ஜனதா மேலிடத்தின் முடிவை எதிர்க்கிறேன் - சீனிவாச பிரசாத் எம்.பி. ஆவேசம்
துணை முதல்-மந்திரிகள் தேவையில்லை என்றும், பா.ஜனதா மேலிடத்தின் முடிவை எதிர்க்கிறேன் என்றும் சீனிவாச பிரசாத் எம்.பி. ஆவேசமாக கூறியுள்ளார்.
மைசூரு,
மைசூருவில் நேற்று பா.ஜனதா மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சீனிவாச பிரசாத் ஆவேசமாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கர்நாடகத்தில் முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் பா.ஜனதா ஆட்சி அமைந்துள்ளது. ஆனால் புதிதாக 3 துணை முதல்-மந்திரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர். மந்திரிகளுக்கு இலாகாக்கள் ஒதுக்கப்பட்டதிலும் அதிருப்திகள் எழுந்துள்ளன. இதனால் கட்சிக்குள் கருத்து வேறுபாடுகள், குழப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. அரசியல் சாசனப்படி துணை முதல்-மந்திரிகள் தேவையில்லை.
துணை முதல்-மந்திரிகள் பதவிகளை வழங்க பா.ஜனதா மேலிடம் முடிவு செய்துள்ளதை நான் எதிர்க்கிறேன். பா.ஜனதாவுக்காக துணை நிற்கும் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள 17 எம்.எல்.ஏ.க் களின் நிலை குறித்து சிந்திக்க வேண்டும்.
மாநிலத்தில் மழை, வெள்ளத்தால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மிகவும் கஷ்டத்தில் சிக்கி இருக்கிறார்கள். இந்த நிலையில் பதவிக்காகவும், முக்கிய துறைகளை பெறவும் சண்டை போட்டுக் கொண்டிருப்பது சரியல்ல. கிடைத்த பதவிகளை ஏற்றுக் கொண்டு மக்களின் நலனுக்காக பாடுபட வேண்டும்.
என்னுடைய பேச்சை யாரும் கேட்கமாட்டார்கள். ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், தாழ்த்தப்பட்ட மக்களுக்கான ஒதுக்கீடுகளை நிறுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு சிபாரிசு செய்துள்ளார். சாதி பாகுபாடு ஒழியும் வரை இடஒதுக்கீடு இருக்க வேண்டும். இல்லையேல் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான நீதி மறைந்துவிடும். ஒருவேளை மத்திய அரசு, மோகன் பகவத்தின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டால் தாழ்த்தப்பட்ட மக்கள் அமைதியாக இருக்க மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story