ரூ.500 லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரிக்கு 2 ஆண்டு ஜெயில்


ரூ.500 லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரிக்கு 2 ஆண்டு ஜெயில்
x
தினத்தந்தி 28 Aug 2019 4:45 AM IST (Updated: 28 Aug 2019 1:13 AM IST)
t-max-icont-min-icon

அரசு உதவித்தொகை பெற விண்ணப்பித்த கூலி தொழிலாளியிடம் ரூ.500 லஞ்சம் வாங்கிய வழக்கில் பெண் அதிகாரிக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு கூறப்பட்டுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர்,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள எதிர்கோட்டை கிராமத்தை சேர்ந்த குருசாமி என்பவரது மகன் சந்திரசேகர். கூலி தொழிலாளி. இவருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர் 2 பெண் குழந்தைகளுக்கு அரசு வழங்கும் உதவித்தொகையை பெற ஊராட்சி ஒன்றிய சமூக நலத்துறை அதிகாரி கமலாதேவியை (வயது42) அணுகியுள்ளார். அப்போது அவர் ரூ.500 லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத சந்திரசேகர் இதுகுறித்து விருதுநகரிலுள்ள லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் முறையிட்டுள்ளார். போலீசாரின் ஏற்பாட்டின்படி ரசாயன பொடி தடவிய ரூ.500 ஐ பெண் அதிகாரியிடம் சந்திரசேகர் கொடுத்த போது மறைந்திருந்த போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இந்த சம்பவம் கடந்த 4-6-2010 அன்று நடந்தது.

இதுதொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட குற்றவியல் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை நீதிபதி சரண் விசாரித்து பெண் அதிகாரி கமலாதேவிக்கு 2 ஆண்டு ஜெயில் மற்றும் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.

Next Story