நொய்யல் அருகே கரும்பு தோட்டங்கள் தீயில் எரிந்து நாசம்


நொய்யல் அருகே கரும்பு தோட்டங்கள் தீயில் எரிந்து நாசம்
x
தினத்தந்தி 28 Aug 2019 3:45 AM IST (Updated: 28 Aug 2019 1:26 AM IST)
t-max-icont-min-icon

நொய்யல் அருகே கரும்பு தோட்டங்கள் தீயில் எரிந்து நாசமானது.

நொய்யல்,

நொய்யல் அருகே உள்ள மரவாபாளையத்தைச் சேர்ந்தவர் அருணாச்சலம் (வயது 55). இவரது கரும்பு தோட்டத்தில் திடீரென்று தீப்பற்றி எரிந்தது. இதைபார்த்த அருகே உள்ள தோட்டத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த தொழிலாளர்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அணைக்க முடியவில்லை. அப்போது, பலத்த காற்று வீசியதால் தீ வேகமாக பரவியது.

இது குறித்து உடனடியாக வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கரும்பு தோட்டத்தில் பற்றி எரிந்த தீயை மேலும் பரவாமல் தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத் தனர். இதில் ரூ.70 ஆயிரம் மதிப்பிலான கரும்புகள் எரிந்து நாசமாயின.

மற்றொரு தோட்டம்

அதேபோல், மரவாபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (50). இவரது கரும்பு தோட்டத்திலும் திடீரென்று தீப்பற்றி எரிந்தது. இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை. இதனையடுத்து வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. அதன்பேரில் அவர்கள் விரைந்து வந்து தீயை மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர். இதில் ரூ.1 லட்சம் மதிப் பிலான கரும்புகள் எரிந்து நாசமாயின.

Next Story