போலீஸ் தேர்வு எழுதியவர் மர்ம சாவு: சோழவந்தான் வைகை ஆறு அருகே பிணமாக கிடந்தார்


போலீஸ் தேர்வு எழுதியவர் மர்ம சாவு: சோழவந்தான் வைகை ஆறு அருகே பிணமாக கிடந்தார்
x
தினத்தந்தி 28 Aug 2019 4:45 AM IST (Updated: 28 Aug 2019 1:27 AM IST)
t-max-icont-min-icon

போலீஸ் வேலைக்கான தேர்வு எழுதிய வாலிபர் சோழவந்தான் வைகை ஆற்றின் அருகே மர்மமான முறையில் பிணமாக கிடந்தார்.

சோழவந்தான்,

மதுரை மாவட்டம் சோழவந்தான் வைகை ஆற்றின் அருகே ஒரு வாலிபர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சோழவந்தான் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணையில், இறந்து கிடந்தது பேட்டை கிராமத்தை சேர்ந்த அய்யனார் மகன் கார்த்திக் (வயது 22) என்பதும், இவர் போலீஸ் வேலைக்கான எழுத்து தேர்வில் பங்கேற்றவர் என்பதும் தெரியவந்தது.

ஆனால் கார்த்திக் எப்படி இறந்தார்? என தெரியவில்லை. கழுத்து மற்றும் நெற்றிப்பகுதியில் கற்கள் குத்தி இருப்பதற்கான அடையாளங்கள் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

கார்த்திக் மற்றும் அவரது நண்பர்கள் அடிக்கடி வைகை ஆற்றின் அருகில் உள்ள கால்வாய் பகுதியில் அமர்ந்து பேசி கொண்டிருப்பார்களாம். நேற்று முன்தினம் கார்த்திக்குடன் வந்தவர்கள் யார் என்பது தெரியவில்லை. அவரது செல்போனை ஆய்வு செய்தபோது அவர் கடைசியாக ஒரு நண்பருடன் பேசி இருப்பது தெரியவந்தது.

அந்த எண்ணை போலீசார் தொடர்பு கொண்டபோது யாரும் எடுக்கவில்லை. எனவே கார்த்திக் சாவில் மர்மம் நீடித்து வருகிறது. தொடர்ந்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story