குடிபோதையில் வாகனம் ஓட்டியவருக்கு ரூ.15 ஆயிரம் அபராதம்: நெல்லை கோர்ட்டு தீர்ப்பு
நெல்லையில் குடிபோதையில் வாகனம் ஓட்டியவருக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து நெல்லை கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
நெல்லை,
நெல்லை மாநகர பகுதியில் விபத்துகள் நடப்பதை தடுக்கவும், குடிபோதையில் வாகனம் ஓட்டி செல்வதை தடுக்கவும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட வேண்டும் என்று நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனர் சரவணன் உத்தரவிட்டார். அதன்பேரில் நெல்லை சந்திப்பு போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சம்பவத்தன்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, நெல்லை பேட்டையை சேர்ந்த சிவகுமார் மகன் ஹரீஸ் (வயது 30) என்பவர் குடிபோதையிலும், ஓட்டுனர் உரிமம் இல்லாமலும் மோட்டார் சைக்கிள் ஓட்டி சென்றார். உடனே அவரை பிடித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு நெல்லை 3-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்த மாலை நேர கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. வழக்கை மாஜிஸ்திரேட்டு பழனி விசாரித்து, குடிபோதையிலும், ஓட்டுனர் உரிமம் இல்லாமலும் வாகனம் ஓட்டி சென்றதற்காக ஹரீசுக்கு புதிய வாகன சட்டத்தின்படி ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.
Related Tags :
Next Story