ஜவ்வாதுமலையில், 1000 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு - போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை


ஜவ்வாதுமலையில், 1000 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு - போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை
x
தினத்தந்தி 28 Aug 2019 3:45 AM IST (Updated: 28 Aug 2019 2:17 AM IST)
t-max-icont-min-icon

ஜவ்வாதுமலை பகுதி கிராமங்களில் போலீசார் நடத்திய சாராய வேட்டையில் 1000 லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டது.

கண்ணமங்கலம்,

கண்ணமங்கலம் அருகே படவேடு பகுதியில் உள்ள ஜவ்வாதுமலையில் உள்ள நீர்த்தும்பை, செண்பகத்தோப்பு ஆகிய மலை கிராமங்களில் சாராயம் காய்ச்சுவதாகவும், விற்பனை நடப்பதாகவும் போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதனையடுத்து நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்ரவர்த்தி தலைமையில், துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜன், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு மற்றும் 30 போலீசார் கொண்ட குழுவினர் ஜவ்வாதுமலை பகுதி கிராமங்களில் சாராய வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது நீர்த்தும்பை கிராமத்தை சேர்ந்த குமாரசாமி (வயது 50) என்பவர் சாராயம் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். போலீஸ் வருவதை அறிந்த குமாரசாமி சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடி விட்டார். இதையடுத்து அவர் ரகசியமாக பதுக்கி வைத்திருந்த 1000 லிட்டர் சாராய ஊறலை போலீசார் கண்டுபிடித்து அழித்தனர். மேலும் தப்பி ஓடிய குமாரசாமி மீது சந்தவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். மேலும் சாராயவேட்டை தீவிரப்படுத்தப்பட்டு போலீசார் சோதனையை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

Next Story