மனஅழுத்தத்தை குறைக்க ரெயில்வே பாதுகாப்பு படை வீரர்களுக்கு யோகா பயிற்சி


மனஅழுத்தத்தை குறைக்க ரெயில்வே பாதுகாப்பு படை வீரர்களுக்கு யோகா பயிற்சி
x
தினத்தந்தி 28 Aug 2019 3:20 AM IST (Updated: 28 Aug 2019 3:20 AM IST)
t-max-icont-min-icon

ரெயில்வே பாதுகாப்பு படை வீரர்களுக்கு சிறப்பு யோகா பயிற்சி அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக பணிச்சுமை உள்ளிட்ட பல காரணங்களால் மனஅழுத்தம் ஏற்பட்டு போலீசார் பலர் தற்கொலை செய்துகொள்ளும் நிலை அவ்வப்போது நிகழ்கிறது. இவ்வாறு மனஅழுத்தத்தில் சிக்கி தவிக்கும் போலீசாருக்கு சென்னை போலீஸ் துறை சார்பில் சிறப்பு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. அதேப்போல் ரெயில்வே பாதுகாப்பு படை வீரர்களுக்கும் பயிற்சி அளிக்க வேண்டும் என கோரிக்கைகள் வைக்கப்பட்டது.

இதையடுத்து ரெயில்வே பாதுகாப்பு படை வீரர்களுக்கு சிறப்பு யோகா பயிற்சி அளிக்க மூத்த ரெயில்வே மண்டல பாதுகாப்பு படை கமிஷனர் சந்தோஷ் என்.சந்திரன் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவின் பேரில் எழும்பூர் ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையில் நேற்று காலை யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த யோகா பயிற்சியில் 50-க்கும் மேற்பட்ட ரெயில்வே பாதுகாப்பு படையினர் கலந்து கொண்டனர்.

பணியில் இருக்கும் போது ரெயில் பயணிகளை கையாளும் முறை, உடலை பேணிக்காப்பது, மன நிலையை சீராக வைப்பது உள்ளிட்ட காரணங்களுக்காக யோகா பயிற்சி அளிக்கப்பட்டதாகவும், மன உளைச்சலை போக்கும் வகையில் உடல் மற்றும் மன நிலையை சீராக வைப்பதற்கும், சிறப்பு யோகா பயிற்சி அளிக்கப்பட்டதாக ரெயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story