சிறப்பு குறை தீர்வு முகாமில் கழிவுநீர் கலந்த தண்ணீருடன் பெண்கள் வந்ததால் பரபரப்பு
குறை தீர்வு திட்ட முகாமுக்கு கழிவுநீர் கலந்த தண்ணீருடன் பெண்கள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவொற்றியூர்,
திருவொற்றியூரை அடுத்த எர்ணாவூரில் முதல்-அமைச்சர் குறை தீர்வு திட்ட முகாம் நடைபெற்றது. முதியோர் ஓய்வூதியம், விதவைகள் ஓய்வூதியம், பட்டா மாறுதல் உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு தீர்வு காணும் விதமாக இந்த முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாமில் திருவொற்றியூர் தாசில்தார் ஜெயராமன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது காசிவிசாலாட்சி கோவில் குப்பம் மற்றும் பெரிய காசி கோவில் குப்பத்தை சேர்ந்த பெண்கள் 50 பேர் கழிவுநீர் கலந்த தண்ணீரை பாட்டிலில் கொண்டு வந்தனர். அவர்கள் அதிகாரிகளிடம் தங்கள் பகுதியில் உள்ள ஒரு தனியார் கெமிக்கல் கம்பெனியில் இருந்து வெளி வரும் புகையால் அடிக்கடி குழந்தைகள் மற்றும் முதியோருக்கு மூச்சுத்திணறல் ஏற்படுவதாகவும், தொழிற்சாலையில் இருந்து வரும் கழிவுநீரால் நிலத்தடி நீர் மாசுபடுவதாகவும் கூறி தாசில்தாரிடம் புகார் மனு அளித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே அவர்களிடம் இருந்து புகார் மனுவை வாங்கிய தாசில்தார் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
Related Tags :
Next Story