கள்ளக்காதலி உள்பட 4 பேரை கொலை செய்த காமக்கொடூரனுக்கு ஆயுள் தண்டனை சென்னை மகளிர் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
கள்ளக்காதலி உள்பட 4 பேரை கொலை செய்த காமக்கொடூரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு கூறியுள்ளது.
சென்னை,
சென்னை ராயப்பேட்டை முத்து தெருவில் வசித்து வந்தவர் பாண்டியம்மாள். இவரது கணவர் சின்னராஜ். இவர்களுக்கு பவித்ரா, பரிமளா, சினேகா என 3 மகள்கள் இருந்தனர்.
சின்னராஜ் பழனியில் உள்ள ஒரு பேக்கரியில் வேலை பார்த்து வந்தார். அப்போது, அதே பேக்கரியில் வேலை பார்த்து வந்த உதயன் என்பவருக்கும், சின்னராஜூக்கும் பழக்கம் ஏற்பட்டது.
இதனால், சின்னராஜ் வீட்டுக்கு உதயன் அடிக்கடி சென்று வந்தார். இதில் உதயனுக்கும், பாண்டியம்மாளுக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.
கணவரை பிரிந்து வந்தார்
இதைத்தொடர்ந்து, பாண்டியம்மாள் கடந்த 2012-ம் ஆண்டு கணவரை பிரிந்து தனது 3 மகள்களுடன் கள்ளக்காதலன் உதயனுடன் பழனியில் இருந்து வந்து சென்னையில் குடியேறினார்.
இந்தநிலையில், பாண்டியம்மாளின் மகள் பரிமளாவிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு உதயன் கேட்டுள்ளார். இதை பரிமளா தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார். இதனால், உதயனை பாண்டியம்மாள் மதிக்கவில்லை. மேலும், வீட்டுக்குள் அனுமதிக்காமல் தவிர்த்து வந்தார்.
தாய்-மகள்கள் கொலை
இதற்கிடையே பாண்டியம்மாளின் நடத்தையில் உதயனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. ஏற்கனவே பாண்டியம்மாள் மீது ஆத்திரத்தில் இருந்து வந்த உதயனுக்கு, இந்த விவகாரம் மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
கடந்த 20.6.2016 அன்று பாண்டியம்மாளின் வீட்டுக்கு சென்ற உதயன், ஆத்திரத்தில் பாண்டியம்மாள் மற்றும் அவரது 3 மகள்களையும் கத்தியால் குத்தி கொலை செய்தார்.
பின்னர், பிணங்களுடன் உடலுறவு கொண்டுள்ளார். இந்த கொடூர சம்பவம் குறித்து ராயப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து உதயனை கைது செய்தனர்.
ஆயுள்தண்டனை
இந்த வழக்கு விசாரணை சென்னை மகளிர் கோர்ட்டில் நீதிபதி மஞ்சுளா முன்னிலையில் நடந்தது. போலீசார் தரப்பில் சிறப்பு அரசு வக்கீல் ஸ்ரீலேகா ஆஜராகி வாதாடினார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, காமக்கொடூரன் உதயனுக்கு 4 ஆயுள்தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து பரபரப்பு தீர்ப்பு கூறினார்.
ஆயுள் தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் கூறி உள்ளார்.
Related Tags :
Next Story