பெருந்துறை சிப்காட்டில் சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு ஆய்வு


பெருந்துறை சிப்காட்டில் சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு ஆய்வு
x
தினத்தந்தி 29 Aug 2019 4:15 AM IST (Updated: 28 Aug 2019 10:27 PM IST)
t-max-icont-min-icon

பெருந்துறை சிப்காட்டில் சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு ஆய்வு செய்தது.

சென்னிமலை,

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழுவின் தலைவரும் மேட்டூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான எஸ்.செம்மலை தலைமையிலான குழுவினர் எம்.எல்.ஏ.க்கள் எஸ்.ஈஸ்வரன்(பவானிசாகர்), அ.நல்லதம்பி (திருப்பத்தூர்) ஆகியோர் ஈரோடு மாவட்டத்தில் நேற்று 2-வது நாளாக ஆய்வுப்பணியில் ஈடுபட்டனர்.

பெருந்துறை சிப்காட் வந்த அவர்களை சுத்திகரிப்புநிலைய இயக்குனர் என்.சந்திரசேகரன், உறுப்பினர்கள் ஆர்.ஜெயக்குமார், விஜயகுமார், ராஜேஸ்நாயர் ஆகியோர் வரவேற்றனர்.

அதைத்தொடர்ந்து குழுவினர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளே சென்று, அங்கு சாய கழிவுகள் எவ்வாறு மறுசுழற்சி செய்யப்படுகிறது என்பதையும், கொதிகலன் மூலம் ஆவியாக்கி உப்பை பிரித்தெடுக்கும் முறையை பற்றியும் ஆய்வு செய்தனர். பின்னர் சிப்காட்டில் உள்ள ரவுண்டானாவில் அடர்வனம் அமைக்கும் திட்டத்துக்காக மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தனர். இந்த ஆய்வின்போது குழுவினருடன் பெருந்துறை மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி சரவணன் பெருந்துறை தாசில்தார் துரைசாமி, சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Next Story