மோட்டாருக்கு மின் இணைப்பு வழங்குவதில் தாமதம்: 2 கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு நீடிக்கும் நிலை
திருப்பரங்குன்றம் அருகே 2 கிராம மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க ஆழ்துளை கிணறு அமைத்து மோட்டார் பொருத்தப்பட்ட நிலையில் மின் இணைப்பு வழங்கப்படாததால் அவை செயல்பாட்டுக்கு வரவில்லை.
திருப்பரங்குன்றம்,
திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பழைய குசவன் குண்டு ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவியது. இதனை தொடர்ந்து அப்போது எம்.எல்.ஏ.வாக இருந்த ஏ.கே.போஸ் பரிந்துரையின் பேரில் குசவன்குண்டு கண்மாயின் உள் பகுதியில் கடந்த 8 மாதத்திற்கு முன்பு சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.5லட்சம் செலவில் புதிதாக ஆழ்துளை கிணறு போடப்பட்டது. மேலும் குடியிருப்பு பகுதி வரையிலுமாக குழாய் பதிக்கப்பட்டது.
அதைக்கண்ட அந்த பகுதி மக்கள் குடிநீர் தட்டுப்பாடு நீங்கப்போகிறது என்று நினைத்தனர். மேலும் பழைய குசவன்குண்டு கண்மாயில் இருந்து ஆழ்துளை கிணற்றில் இணைக்கப்பட்டுள்ள மின்மோட்டாரை இயக்கி மேல்நிலை நீர் தொட்டியில் தண்ணீர் ஏற்றி தெருக்குழாய்களில் குடிநீர் வினியோகம் செய்யப்படும் நாளை எதிர்நோக்கினர். ஆனால் பல மாதங்கள் ஆகியும் புதிதாக போடப்பட்ட ஆழ்துளை கிணற்றிலிருந்து தண்ணீர் உறிஞ்சக்கூடிய மின்மோட்டார் இயக்குவதற்கு இதுநாள் வரை மின் இணைப்பு வழங்கப்படாத நிலையே உள்ளது.
குசவன்குண்டு கண்மாய் பகுதியை சார்ந்து ரோட்டில் உள்ள ஒரு மின்கம்பத்தில் மின் இணைப்பு வயர் கட்டப்பட்டு காட்சிப்பொருளாக பெயருக்கு தொங்க விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் குசவன்குண்டு கிராம மக்கள் குடிநீர் தட்டு ப்பாட்டால் அவதிப் படுவதை அதிகாரிகள் யாரும் கண்டு கொள்வதாக தெரியவில்லை.
இதேபோல திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரிய ஆலங்குளம் ஊராட்சி தொட்டியபட்டி கண்மாய்க்குள்ளும் அந்த பகுதி மக்களின் குடிநீர் வசதிக்காக கடந்த 4 மாதத்துக்கு முன்பு ஒருஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு அதில் சுமார் 4 அடி உயரத்திற்கு சுவர் கட்டப்பட்டுள்ளது.
மேலும் அந்த பகுதியில் உள்ள கருப்பசாமி கோவில் வளாகத்தில் உள்ள கண்மாய் கரையின் கீழ்ப்பகுதியில் மின்மோட்டார் இயக்குவதற்காக ஒரு மின் கம்பத்தில் மின் இணைப்பு பெறுவதற்காக வயர் கட்டி காட்சி பொருளாக தொங்கவிடப்பட்டுள்ளது. புதிய மின் மோட்டார் மற்றும் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு 4 மாதங் களாகியும் இதுநாள் வரை இந்த மின்மோட்டாருக்கும் மின் இணைப்பு பெறப்படாத நிலையே இருந்து வருகிறது.
ஒரே ஊராட்சி ஒன்றியத்தில் 2 கிராம பகுதியில் ஆழ்துளை கிணறு மற்றும் மின் மோட்டார்கள் போடப்பட்ட போதிலும் அதை பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் அதிகாரிகள் பாராமுகமாக உள்ளனர். இதில் மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story