சேலத்தில், வருங்கால வைப்பு நிதி ஊழியர்கள் வேலைநிறுத்தம்


சேலத்தில், வருங்கால வைப்பு நிதி ஊழியர்கள் வேலைநிறுத்தம்
x
தினத்தந்தி 29 Aug 2019 3:45 AM IST (Updated: 29 Aug 2019 4:42 AM IST)
t-max-icont-min-icon

ஊதிய முரண்பாடு குழு பரிந்துரையை அமல்படுத்த வலியுறுத்தி சேலத்தில் வருங்கால வைப்பு நிதி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம் நடத்தினர்.


சேலம், 


சேலம் மாவட்ட வருங்கால வைப்பு நிதி ஊழியர்கள் சங்கத்தினர் நேற்று சட்டையில் கருப்பு பேட்ஜ் அணிந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் சேலத்தில் உள்ள அலுவலக வளாகத்தில் அமர்ந்து கோரிக்கைகள் குறித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர். போராட்டத்துக்கு சங்க துணைத்தலைவர் சர்தார் அமான் தலைமை தாங்கினார். செயலாளர் சாதகிராமன், துணை செயலாளர் ரமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேலை நிறுத்த போராட்டத்தில் மத்திய குழு அங்கீகரிக்கப்பட்ட ஊதிய முரண்பாட்டு குழு பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் தற்போது எழுத்தர், கடை நிலை ஊழியர்கள் என காலியாக உள்ள மொத்தம் 3 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஆரம்ப நிலை பதவிகளுக்கான ஆட்கள் சேர்ப்பு விதிகளை உடனடியாக வகுக்க வேண்டும் என்பது உள்பட 10 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப் பட்டன.

இது குறித்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும் போது, எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஏற்கனவே 2 முறை போராட்டம் நடத்தினோம். தற்போது 3-ம் கட்டமாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம். இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். எனவே எங்கள் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்று கூறினர்.

Next Story