கம்பம் பகுதியில், நீரோடைகளின் ஆக்கிரமிப்பால் நிரம்பாத குளங்கள்


கம்பம் பகுதியில், நீரோடைகளின் ஆக்கிரமிப்பால் நிரம்பாத குளங்கள்
x
தினத்தந்தி 30 Aug 2019 4:15 AM IST (Updated: 30 Aug 2019 12:05 AM IST)
t-max-icont-min-icon

கம்பம் பகுதியில், நீரோடைகளின் ஆக்கிரமிப்பால் குளங்கள் நிரம்பவில்லை என்று விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

கம்பம்,

கம்பம் அருகே மேற்குத்தொடர்ச்சி மலையடிவார பகுதியில் ஏராளமான மானாவாரி நிலங்கள் உள்ளன. இங்கு சோளம், மொச்சை, நிலக்கடலை, கேழ்வரகு, கம்பு, தட்டைப்பயறு, பாசிப்பயறு ஆகியவற்றை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். ஆனால் இந்த பகுதியில் நிலத்தடி நீர் ஆதாரமாக இருந்த குளங்கள் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ளன.

இந்தநிலையில் கடந்த ஆண்டு அப்பகுதி விவசாயிகளின் முயற்சியால் ஆலமரத்துக்குளம் தூர்வாரப்பட்டது. ஆனால் குளத்துக்கு வருகிற நீரோடைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. இதனால் போதிய மழை பெய்தும் குளத்தில் தண்ணீர் நிரம்பவில்லை. எனவே ஆலமரத்துக்குளம், தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது.

இதேபோல் கம்பம் பகுதியில் உள்ள குளங்கள், வாய்க் கால்கள், நீரோடைகள் உள்ளிட்ட நீர்நிலைகள் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ளன. இதனால் தண்ணீர் தேக்கி வைக்க முடியவில்லை. நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்துக்கு சென்று விட்டது. ஆயிரம் அடிக்கு மேல் ஆழ்துளை கிணறு அமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

போதிய தண்ணீர் இல்லாததால் வானம் பார்த்த பூமியாக விளைநிலங்கள் உள்ளன. இந்தநிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு, கம்பம் மேற்குத்தொடர்ச்சி மலையடிவார பகுதிகளில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. ஓடைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. ஆனால் ஆங்காங்கே ஆக்கிரமிப்பு தலைவிரித்தாடுவதால் குளங்களில் தண்ணீர் தேங்கவில்லை. சாலைகள் வழியாக தண்ணீர் வீணாக சென்றது.

எனவே ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ள நீர்நிலைகளை மீட்க வேண்டும். தூர்வாரப்படாத குளங்கள், வாய்க்காலை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து கம்பம் பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறும்போது, மழைக்காலத்தில் மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர், அப்பகுதியில் உள்ள ஓடைகள் வழியாக ஆலமரத்துக்குளம், சிக்காலிகுளம், புதுக்குளத்துக்கு வந்தடைகிறது. இந்த குளங்களுக்கு தண்ணீர் வருகிற ஓடையை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் குளத்துக்கு தண்ணீர் வருவதில்லை. குளம் இருந்ததற்கான அடையாளம் தெரியாத அளவுக்கு புதுக்குளம் உள்ளது. தனியார் ஆக்கிரமிப்பின் பிடியில் இருந்த சிக்காலிகுளத்தை கடந்த ஆண்டு வருவாய்த்துறையினர் மீட்டெடுத்தனர். ஆனால் குளத்தை தூர்வார நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ள நீரோடைகள் மற்றும் குளங்களை மீட்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

கடமலை-மயிலை ஒன்றியம் மயிலாடும்பாறை அருகே 109 ஏக்கர் பரப்பளவில் பெரிய குளம் கண்மாய் உள்ளது. சுக் கான் ஓடை மற்றும் மூல வைகை ஆற்றில் இருந்து வாய்க் கால் மூலம் இந்த கண் மாய்க்கு தண்ணீர் வருவதற்கு வாய்க்கால் அமைக் கப் பட்டுள்ளது. ஆனால் பெரிய குளம் கண் மாயில், கடந்த சில ஆண்டு களாக எந்தவித பரா மரிப்பு பணிகளும் மேற் கொள்ளப் பட வில்லை. இதனால் விவசாயி கள் சிலர், கண்மாயின் பெரும்பாலான இடங் களை ஆக்கிரமித்து தென்னை, முருங்கை ஆகிய வற்றை பயிரிட்டுள்ளனர்.

பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இந்த கண்மாயில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று மயிலாடும் பாறை பகுதியை சேர்ந்த விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதன் எதிரொலியாக குடிமராமத்து திட்டத்தின் கீழ் பெரியகுளம் கண்மாயை தூர்வார மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. இதனை யடுத்து கண்மாயை வருவாய்த்துறை யினர் அளவீடு செய்து, நேற்று முன் தினம் முதல் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை தொடங் கினர்.

பெரியகுளம் ஆர்.டி.ஓ. ஜெயப் பிரித்தா முன்னிலை யில், கண்மாயில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது. கண்மாயில் உள்ள தென்னை மரங்கள் அகற்றப்பட்டன. பொதுப்பணித்துறை பொறியாளர் கணேசமூர்த்தி ஆக்கிர மிப்பு அகற்றும் பணியை பார்வை யிட்டு ஆய்வு செய்தார். ஆக்கிரமிப்பு அகற்றுவதையொட்டி மயிலாடும் பாறை போலீசார் பாதுகாப்பு பணி களில் ஈடுபட்டனர். இதேபோல் அனைத்து நீர்நிலைகளிலும் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Next Story