மனைவி பிரிந்து சென்ற கவலை: மின்வாரிய ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை
ஆனைமலை அருகே மனைவி பிரிந்து சென்ற கவலையில் மின்வாரிய தற்காலிக ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
ஆனைமலை,
ஆனைமலையை அடுத்த காளியாபுரம் அருகே உள்ள நரிக்கல்பதியைச் சேர்ந்தவர் ரத்தினசாமி. இவரது மகன் பாலகுரு (வயது27). இவர் பி.காம் படித்துவிட்டு அப்பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர் தெய்வநாயகி (23) என்பவரை காதலித்து கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு 5 வயதில் வர்ஷிகா என்ற மகளும் உள்ளார். தெய்வநாயகி சினிமா, டி.வி.நாடகங்களில் நடிப்பவர்களுக்கு டப்பிங் எனப்படும் பின்னணி குரல் கொடுக்கும் வேலை செய்து வந்தார். இதற்காக அடிக்கடி அவர் சென்னை சென்று வருவதும் வழக்கம். காதலித்தபோது அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாத பாலகுரு திருமணத்திற்கு பிறகு குழந்தையை கவனிக்க வேண்டி இருப்பதால் டப்பிங் பேச செல்ல வேண்டாம் என்று எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார்.
இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. தகராறு முற்றிய நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்குமுன்பு தெய்வநாயகி தனது குழந்தையை அழைத்துக்குகொண்டு கணவனை பிரிந்து சென்றார். இனி இருவரும் சேர்ந்து வாழ வழியில்லை என்று முடிவு செய்த பாலகுரு விவாகரத்து கோரி கோர்ட்டில் வழக்கும் தொடுத்தார். இந்த வழக்கு கோர்ட்டில் நடந்து வருகிறது. இதனால் பாலகுரு கடந்த சில மாதங்களாகவே விரக்தியுடன் காணப்பட்டுள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு பணி முடிந்து வீட்டிற்கு வந்த பாலகுரு, தூங்கச் செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு தனது அறைக்குச் சென்றார். மறுநாள் காலை வெகுநேரம் ஆகியும் பாலகுரு வராததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் அவரது அறைக்குச்சென்று பார்த்தனர்.
அங்கு பாலகுரு கயிற்றில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாக தகவல் அறிந்ததும் ஆனைமலை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந் தனர்.
பாலகுருவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேட்டைக்காரன்புதூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பாலகுரு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story