கொடிசியாவில் அறிவியல் கண்காட்சி: விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா முன்னோடியாக திகழ்கிறது
விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா முன்னோடியாக திகழ்கிறது என்று கொடிசியா அறிவியல் கண்காட்சியை தொடங்கி வைத்து விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேசினார்.
சரவணம்பட்டி,
கோவை கொடிசியா சாா்பில் சா்வதேச அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கண்காட்சி-2019 கோவை அவினாசி சாலையில் உள்ள கொடிசியா வளாகத்தில் நேற்று தொடங்கியது. இந்த கண்காட்சி தொழில் முனைவோர்களின் தேவையை பூர்த்தி செய்யும் விதமாகவும், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் தங்கள் அறிவியல், தொழில்நுட்ப திறனை வெளிப்படுத்தும் விதமாகவும் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த கண்காட்சி நாளை (ஞாயிற்றுக்கிழமை) வரை நடைபெறும். நேற்று நடந்த தொடக்க விழாவுக்கு கண்காட்சியின் தலைவா் முத்துசாமி தலைமை தாங்கினார். கொடிசியா தலைவா் ராமமூர்த்தி வரவேற்றார். கண்காட்சியை தமிழக அரசின் அறிவியல் தொழில் நுட்பக குழுவின் துணைத்தலைவரும், இஸ்ரோ விஞ்ஞானியுமான மயில்சாமி அண்ணாதுரை, மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் அமைப்பின் இயக்குனா் பன்னீர்செல்வம் ஆகியோர் தொடங்கிவைத்து பார்வையிட்டனர். விழாவில் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேசும்போது கூறிய தாவது:-
இஸ்ரோ தொடங்கப்பட்டு 50 ஆண்டுகளாகிறது. தற்போது பொன்விழா காணும் இஸ்ரோ முன்பு 4 வருடத்திற்கு ஒருமுறை செயற்கைகோளை விண்ணில் செலுத்தியது. தற்போது விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா மிகப்பெரிய வளா்ச்சியை அடைந்து வருடத்திற்கு ஒரு செயற்கைகோளை விண்ணில் செலுத்தி முன்னோடியாக திகழ்ந்து வருகிறது.
இன்றைய சூழ்நிலையில் மாதத்திற்கு ஒரு செயற்கைகோளை விண்ணில் செலுத்த வேண்டிய சூழல் உள்ளது. இஸ்ரோவில் ஆட்களின் எண்ணிக்கை கூடவும் இல்லை. குறையவும் இல்லை. ஆனால் தொழில்நுட்பம் பெரிய அளவில் வளா்ந்துள்ளது. கற்றல் மட்டுமே இல்லாமல் புதிய கோணத்தில் சிந்தித்தால் மட்டுமே புதிய படைப்புகளை உருவாக்க முடியும். மாணவா்களை ஊக்குவித்து அவா்களின் புதிய படைப்புகளுக்கு தளம் அமைத்து கொடுத்துள்ள பொன்விழா கொண்டாடும் கொடிசியா அமைப்பிற்கு எனது பாராட்டுக்களை தொிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
அதைத்தொடர்ந்து அவர் கண்காட்சியில் நாமக்கல் மாவட்ட அரசு பள்ளி மாணவா்கள் தேசிகன், சந்துரு ஆகியோர் தயாரித்த சுகாதார கழிவு மற்றும் வேளாண் கழிவுகளிலிருந்து உரம் தயாரிக்கும் கருவி, கோவை சரவணம்பட்டியில் உள்ள எஸ்.என்.எஸ்.கல்லூரி மாணவா்கள் உருவாக்கிய ஏரோஸ்பேஸ் கருவியையும் பார்வையிட்டு வாழ்த்தினார்.
இந்த கண்காட்சியில் 8-ம் வகுப்பு முதல் உயா்கல்வி வரை படிக்கும் மாணவா்களின் அறிவியல் மற்றும் அனைத்து துறை சார்ந்த புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த கண்காட்சியில் தமிழ்நாடு, கேரளா, கா்நாடகா, உத்தரபிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களை சேர்ந்த 160 பள்ளி, கல்லூாிகளில் இருந்து 1,200 மாணவா்களின் கண்டுபிடிப்புகள் இடம்பெற்று உள்ளன. இந்த கண்காட்சியின் மூலம் மாணவா்களின் படைப்புகளை உலகிற்கு அறிமுகப்படுத்துவதோடு, அவர்களுக்கு தொழில்முனைவோர்களின் தொடா்பும் கிடைக்கும். மேலும் மாணவா்களின் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்துவதன் மூலம் அவர்களை தொழில் முனைவோர்களாக உருவாக்க இந்த கண்காட்சி பயனுள்ளதாக அமைந்துள்ளது. இந்த கண்காட்சி அரங்குகளை சிறு, குறு மறறும் நடுத்தர தொழில்துறையினா் உள்பட பலர் ஆர்வமுடன் பார்வையிட்டனா்.
Related Tags :
Next Story