உடுமலை பகுதியில் முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாம்
உடுமலை பகுதியில் முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடந்தது.
உடுமலை,
உடுமலையை அடுத்துள்ள கணக்கம்பாளையம் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் முதல்- அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாம்நடந்தது. முகாமில் உடுமலை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். நில வருவாய் ஆய்வாளர் எம்.ரஞ்சித்குமார், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நாச்சிமுத்து, கிராம நிர்வாக அலுவலர் பரமேஸ்வரன் ஆகியோர் கொண்ட அதிகாரிகள் குழுவினர் பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றனர். ஊராட்சி செயலாளர் கோகிலவாணி வரவேற்று பேசினார். முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர்கள் கிட்டு என்கிற ஆர்.கிருஷ்ணசாமி, தனபாக்கியம்கிருஷ்ணசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். முகாமில் இலவச வீட்டு மனைப்பட்டா கேட்டு 59 மனுக்களும், முதியோர் உதவித்தொகை கேட்டு 38 மனுக்களும், பட்டா மாறுதல் கேட்டு 8 மனுக்களும், மின்சார துறை சம்பந்தமாக 2 மனுக்களும், சமுதாய நலக்கூட வசதி கேட்டு ஒரு மனுவும், ஊரக வளர்ச்சி துறை சார்ந்த 32 மனுக்களும், இதர துறை சார்ந்த 3 மனுக்களும் வந்தன. கணக்கம்பாளையம் ஊராட்சியில் நடந்த முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாமை உடுமலை ஆர்.டி.ஓ. இந்திரவள்ளி ஆய்வு மேற்கொண்டார்.
மலையாண்டிகவுண்டனூரில் உள்ள கண்ணமநாயக்கனூர் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் நடந்த முகாமில் கிராம நிர்வாக அலுவலர் முத்துக்குமார், ஊராட்சி செயலாளர் பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றனர். அப்போதுமுதியோர் உதவித்தொகை கேட்டு 54 மனுக்களும், இலவச வீட்டு மனை பட்டா கேட்டு 16 மனுக்களும்,பட்டா மாறுதல் கேட்டு 11 மனுக்களும், பட்டா நகல் கேட்டு 2 மனுக்களும், இதர துறை சார்ந்த 4 மனுக்களும் வந்தன.
உடுமலை நகராட்சி சார்பில் சதாசிவம் வீதியில் உள்ள உடுமலை நாடார் உறவின் முறையார் சங்கத்திருமணத் மண்டபத்தில் 19 -வது வார்டு முதல் 24- வது வார்டு வரை உள்ள பொது மக்களுக்கான, சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடந்தது. இதில் மண்டல துணைத்தாசில்தார் பொன்ராஜ், நகராட்சி நகர் நல அலுவலர்(பொறுப்பு) சிவக்குமார் ஆகியோர் மனுக்களைப் பெற்றனர். இந்த 6 வார்டு பகுதிகளில் இருந்து இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து மொத்தம் 228 மனுக்கள் வந்தன.
Related Tags :
Next Story