தண்ணீர் லாரி மீது கார் மோதல்: சாப்ட்வேர் என்ஜினீயர் பலி - 2 பேர் படுகாயம்


தண்ணீர் லாரி மீது கார் மோதல்: சாப்ட்வேர் என்ஜினீயர் பலி - 2 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 29 Aug 2019 11:00 PM GMT (Updated: 29 Aug 2019 8:38 PM GMT)

சாலையோரம் நின்ற தண்ணீர் லாரி மீது கார் மோதியதில் சாப்ட்வேர் என்ஜினீயர் பரிதாபமாக இறந்தார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த குரோம்பேட்டை லட்சுமிபுரம் பெரிய தெருவைச் சேர்ந்தவர் சார்லஸ் ஆண்டனிராஜ்(வயது 28). சாப்ட்வேர் என்ஜினீயரான இவர், துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவருடன் சிட்லபாக்கம் அண்ணாநகரை சேர்ந்த ஸ்ரீதர் (25) என்பவரும் பணியாற்றி வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து ஆண்டனிராஜ், ஸ்ரீதர் இருவரும் ஒரே காரில் வீட்டுக்கு புறப்பட்டனர். இவர்களுடன் திருநீர்மலையை சேர்ந்த மற்றொரு ஸ்ரீதர்(20) உடன் வந்தார்.

துரைப்பாக்கத்தில் இருந்து வேளச்சேரி மெயின் ரோடு வழியாக பள்ளிக்கரணை கைவேலி அருகே வந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், அங்கு சாலையோரம் நின்றிருந்த தனியார் தண்ணீர் லாரி மீது மோதியது.

இதில் காரில் இருந்த 3 பேரும் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அங்கிருந்த பொதுமக்கள், 3 பேரையும் மீட்டு பள்ளிக்கரணையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சார்லஸ் ஆண்டனி ராஜ் பரிதாபமாக இறந்தார்.

மற்ற 2 பேரும் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது குறித்து பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story