சேத்தியாத்தோப்பு அருகே, 10 உர மூட்டைகள் திருட்டு


சேத்தியாத்தோப்பு அருகே, 10 உர மூட்டைகள் திருட்டு
x
தினத்தந்தி 30 Aug 2019 4:15 AM IST (Updated: 30 Aug 2019 4:06 AM IST)
t-max-icont-min-icon

சேத்தியாத்தோப்பு அருகே 10 உரமூட்டைகள் திருடுபோனது.

சேத்தியாத்தோப்பு, 

சேத்தியாத்தோப்பு அருகே உள்ள எறும்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன் மகன் வேல்முருகன். இவருடைய விவசாய கிணறு, நெல்லிகொல்லையில் உள்ளது. இதற்காக மின்மோட்டார் வைக்க தனி அறை கட்டப்பட்டுள்ளது. இந்த அறையில் விளை நிலத்திற்கு போடுவதற்காக 10 உரமூட்டைகளை வேல்முருகன் வைத்திருந்தார். வழக்கம்போல் நேற்று முன்தினம் மாலை பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சியதும், மின்மோட்டார் அறையை அவர் பூட்டிவிட்டுச்சென்றார்.

இந்த நிலையில் நேற்று காலையில் சென்று பார்த்தபோது, மின்மோட்டார் அறையின் ஜன்னல் உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது 10 உரமூட்டைகளையும் காணவில்லை. நள்ளிரவில் அதனை மர்ம நபர்கள் திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் சேத்தியாத்தோப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story