தேசியவாத காங்கிரசை சேர்ந்த மேலும் ஒரு எம்.எல்.ஏ. சிவசேனாவில் இணைகிறார் உத்தவ் தாக்கரேயை நேரில் சந்தித்து பேசினார்


தேசியவாத காங்கிரசை சேர்ந்த மேலும் ஒரு எம்.எல்.ஏ. சிவசேனாவில் இணைகிறார் உத்தவ் தாக்கரேயை நேரில் சந்தித்து பேசினார்
x
தினத்தந்தி 30 Aug 2019 5:00 AM IST (Updated: 30 Aug 2019 4:08 AM IST)
t-max-icont-min-icon

தேசியவாத காங்கிரசை சேர்ந்த மேலும் ஒரு எம்.எல்.ஏ., உத்தவ் தாக்கரேயை சந்தித்து பேசினார். இதனால் அவர் சிவசேனாவில் சேர இருப்பதாக கூறப்படுகிறது.

மும்பை,

சட்டசபை தேர்தல் நெருங்குவதையொட்டி எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், தேசியவாத காங்கிரசை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் ஆளும் கட்சிகளான பா.ஜனதா, சிவசேனா கட்சியில் இணைந்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த எம்.எல்.ஏ. திலீப் சோபால் பதவியை ராஜினாமா செய்து விட்டு நேற்று முன்தினம் உத்தவ் தாக்கரே முன்னிலையில் சிவசேனாவில் இணைந்தார்

இந்த பரபரப்புக்கு மத்தியில் தேசியவாத காங்கிரசை சேர்ந்த அவதுத் தத்காரே எம்.எல்.ஏ. நேற்று திடீரென மும்பை பாந்திராவில் உள்ள ‘மாதோ’ இல்லத்தில் உத்தவ் தாக்கரேயை சந்தித்து பேசினார். இவரது உறவினரான ராய்காட் தொகுதி எம்.பி.யும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவருமான சுனில் தத்காரேயும் சிவசேனாவில் இணைய இருப்பதாக சமீப நாட்களாக பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அவதுத் தத்காரே நேற்று உத்தவ் தாக்கரேயை சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சந்திப்புக்கு பின்னர் நிருபர்களின் கேள்விகளுக்கு அவதுத் தத்காரே பதிலளித்து கூறுகையில், “நான் தீவிர அரசியலில் இருக்க விரும்பு கிறேன். இந்த நிலையில் உத்தவ் தாக்கரேயை சந்தித்து பேசி உள்ளேன். எனது அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து அடுத்த 2 நாட்களில் அறிவிப்பேன். அதற்கு முன்னதாக எனது ஆதரவாளர்களுடன் கலந்து ஆலோசனை செய்வேன்” என்றார்.

Next Story